எண்களின் வகைகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணிதத்தில் எண்கள் முக்கிய இடம்பெறுகின்றன. இவை கணிதத்தின் அடிப்படையாக உள்ளன. எண்களைப் பாகுபடுத்தி அறிவது கணிதத்தை இலகுபடுத்தும். எண்களைப் பாகுபடுத்தும் முறை கீழே தரப்பட்டுள்ளது. பிரதானமாக இவை இரு பிரிவுகளாக்கப்படுகின்றன. அவையாவன:
- மெய்யெண்கள்
- சிக்கலெண்கள் என்பனவாகும்.
மெய்யெண்கள்
தொகுஇவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
- விகிதமுறு எண்கள்
- விகிதமுறா எண்கள் என்பனவாகும்.
மேலும் இவை வேறுவிதமாக,
- நேரெண்கள்
- மறையெண்கள் எனவும் பாகுபடுத்தப்படும்.
விகிதமுறு எண்கள்
தொகுஇவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
- நிறையெண்கள்
- மீளும் தசமங்கள்
- முடிவுள் தசமங்கள் என்பனவாகும்.
விகிதமுறா எண்கள்
தொகுஇவை மீளும் தசமங்கள் அல்லாத முடிவில் தசமங்களாகும்.
நேரெண்கள்
தொகுஎண்கோடொன்றில் பூச்சியத்துக்கு வலப்புறம் உள்ள எண்களாகும்.
மறையெண்கள்
தொகுஎண்கோடொன்றில் பூச்சியத்துக்கு இடப்புறம் உள்ள எண்களாகும்.
சிக்கலெண்கள்
தொகுஇவை மெய்ப்பகுதியொன்றையும் கற்பனைப் பகுதியொன்றையும் கொண்டிருக்கும்.
- கற்பனைப்பகுதியானது -1ன் வர்க்கமூலத்தை உள்ளடக்கியிருக்கும்.