வர்க்கமூலம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணிதத்தில் "a" என்னும் எண்ணின் வர்க்கமூலம் என்பது, y2 = a என்னும் சமன்பாட்டில் அமைந்த எண் "y" ஆகும்; . இன்னொரு வகையில் சொல்வதானால், "வர்க்க மூலம்" என்பது, எதன் வர்க்கம் "a" ஆக அமையுமோ அது ஆகும். எடுத்துக்காட்டாக 4 என்பது 16 இன் வர்க்கமூலம். ஏனெனில், 42 = 16.
ஒவ்வொரு எதிரெண் அல்லாத உண்மை எண்ணுக்கும், முதன்மை வர்க்கமூலம் என அழைக்கப்படும், ஒரு தனித்துவமான எதிரெண் அல்லாத வர்க்கமூலம் உண்டு. இதை எனக் குறிப்பது வழக்கம். இங்கே என்பது மூலக்குறி எனப்படும். எடுத்துக்காட்டாக, 32 = 3 × 3 = 9, (-3)2 = -3 × -3 = 9 ஆகவும், 3 எதிரெண் அல்லாத எண் ஆதலாலும், 9 இன் முதன்மை வர்க்க மூலம் 3 என்பதை எனக் குறிப்பர்.
ஒவ்வொரு நேரெண் "a" யும் இரண்டு வர்க்க மூலங்களைக் கொண்டிருக்கும். இவை யும், யும் ஆகும். இவற்றுள் முதலாவது நேரெண், மற்றது எதிரெண். இவ்விரண்டையும் ஒரே குறியீடாக எனக் குறிப்பர். நேரெண் "a" இன் வர்க்க மூலத்தை அடுக்குக் குறி முறையில் a1/2 எனவும் குறிப்பது உண்டு.