எண்குறி முறைமை

எண்குறி முறைமை அல்லது எண்ணுரு முறைமை (numeral system) (அல்லது எண்ணும் முறைமை (system of numeration)) என்பது எண்களைக் குறிப்பிட பயன்படுத்தும் எழுதும் முறைமையைக் குறிக்கும். அதாவது, இது ஒரு ஒருங்கிணைவாக குறிப்பிட்ட எண்களின் கணத்தை எண்ணிலக்கத்தாலோ அல்லது வேறு குறியீடுகளாலோ குறிக்கும் கணிதக் குறிமானம் ஆகும். "11" இன் குறியீடுகள் இரும இலக்க முறைமையில் மூன்று எனும் எண்ணையும் பதின்ம இலக்க முறைமையில் பதினொன்றையும் அல்லது வேறு முழு எண்ணல்லாத அடிமானங்களில் வேறு எண்ணையோ குறிப்பதாக விளக்கலாம்.

எண்குறி சுட்டும் எண் அதன் மதிப்பு எனப்படும்.

கருத்துநிலையில், எண்குறி முறைமை:

  • முழு எண்கள், பகு எண்கள் போன்ற பயன்பாடுள்ள எண்களின் கணத்தைக் குறிக்கும்
  • ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்த உருவகிப்பைத் தரும் (அல்லது, செந்தர உருவகிப்பைத் தரும்)
  • எண்களின் இயற்கணித, எண்கணிதக் கட்டமைப்புகளை உணர்த்தும்.

முதன்மை எண்குறி முறைமைகள்

தொகு

பரவலாக பொதுவழக்கில் உள்ளது இந்து-அரபு எண்குறி முறைமை ஆகும்]].[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. David Eugene Smith; Louis Charles Karpinski (1911). The Hindu-Arabic numerals. Ginn and Company.

தகவல் வாயில்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்குறி_முறைமை&oldid=2696268" இலிருந்து மீள்விக்கப்பட்டது