எண்சார் வகைப்பாடு

உயிரியல் வகைப்பாட்டு முறைகளுள் ஒன்று

எண்சார் வகைப்பாடு (Numerical taxonomy) என்பது உயிரியல் முறைமைகளில் ஒரு வகைப்பாடு அமைப்பாகும். இதில் உயிரலகு எண்ணியல் முறைகளின் மூலம் அவற்றின் தன்மை நிலைகளின் அடிப்படையில் தொகுக்கப்படுகிறது.[1] இவற்றின் பண்புகளின் அகநிலை மதிப்பீட்டைப் பயன்படுத்துவதை விட, திரள் பகுப்பாய்வு போன்ற எண் வழிமுறைகளைப் பயன்படுத்தி உயிரியல் வகைப்பாட்டியலை உருவாக்குவதை இதன் நோக்கமாகக் கொண்டுள்ளது. 1963[2]ல் இராபர்ட் ஆர். சோகல் மற்றும் பீட்டர் எச். ஏ சினீத் ஆகியோரால் முதன்முதலில் இந்த கருத்து உருவாக்கப்பட்டது. பின்னர் இது இவர்களால் விரிவுபடுத்தப்பட்டது.[3] இவர்கள் இப்புலத்தை பீனெடிக்ஸ் என ஒட்டுமொத்த ஒற்றுமைகள் அடிப்படையிலும் கிளைப்பாட்டியல் என வடிவங்களின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தனர். இதில் வகைப்பாடுகள் உயிரலகு மதிப்பிடப்பட்ட பரிணாம வரலாற்றின் கிளை வடிவங்களின் அடிப்படையில் அமைந்தன. சமீபத்திய ஆண்டுகளில், பல ஆய்வாளர்கள் எண் வகைபிரித்தல் மற்றும் பீனெடிக்ஸ் ஆகியவற்றை வேறுபடுத்தப்படித்திருந்தாலும் ஒத்த சொற்களாகக் கருதுகின்றனர்.

இது புறநிலை முறையாக இருந்தாலும், நடைமுறையில் குணாதிசயங்களின் தேர்வு மற்றும் மறைமுகமான அல்லது வெளிப்படையான மதிப்பிடல் முறையில் புலனாய்வாளருக்கு கிடைக்கக்கூடிய தரவு மற்றும் ஆராய்ச்சி ஆர்வங்களால் பாதிக்கப்படுகிறது. வகைப்பாட்டு வரைபடம் மற்றும் கிளைவரைபடம் உருவாக்குவதற்கு, தரவுகளின் அகநிலை தொகுப்புக்குப் பதிலாக எண்ணியல் முறைகளைப் பயன்படுத்தி வெளிப்படையான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதே இதன் குறிக்கோளாக இருந்தது.

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Numerical Taxonomy (biology)". www.accessscience.com. McGraw Hill Ltd. பார்க்கப்பட்ட நாள் 13 April 2010.
  2. Sokal & Sneath: Principles of Numerical Taxonomy, San Francisco: W.H. Freeman, 1963
  3. Sneath and Sokal: Numerical Taxonomy, San Francisco: W.H. Freeman, 1974 by Tejanshu Ravesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்சார்_வகைப்பாடு&oldid=3698334" இலிருந்து மீள்விக்கப்பட்டது