எண்ணல் விளையாட்டு
தொலைவில் தெரியும் பொருள்களை எண்ணுதல் சங்ககால மகளிரின் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று.
சங்கப் பாடல் குறிப்புகள்
தொகு- பாரிமகளிர் தம் தந்தை பாரியின் மலையை வேந்தர் முற்றுகையிட்டிருந்தபோது அவர்களின் படையிலிருந்த குதிரைகளை எண்ணிக்கொண்டிருந்தார்களாம். [1]
- தந்தை பாரி போரில் மாய்ந்தபின் பீர்க்கங்கொடி படர்ந்திருந்த தம் வீட்டு ஈந்திலைக் கூரைமீது ஏறி அங்கிருந்த புல்வெளி வழியாக உப்பு விற்க வந்த வரிசை வண்டிகளை எண்ணிக்கொண்டிருந்தார்களாம்.[2]
- நெய்தல் நிலத்து மகளிர் கடலில் விளையாடி பொழுது சாயும் நேரத்தில் மீளும்போது உப்புக் குவியலின்மீது ஏறி கடலில் மீன்பிடித்துக்கொண்டு வரும் திமில்களை (கட்டுமரங்களை) எண்ணுவார்களாம். [3]
- காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் சிறுமியர் மாடமீது ஏறி இராப்பொழுதில் கடலில் தெரியும் திமில்விளக்குகளை எண்ணுவார்களாம்[4]
இக்காலத்து ஒற்றையா இரட்டையா விளையாட்டோடு இதை ஒப்பிடலாம்.
இவற்றையும் பார்க்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ வலம்படு தானைப் பொலம்படு கலிமா எண்ணுவோரே – புறம் 116
- ↑
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116 - ↑
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எற்பட
வருதிமில் எண்ணும் – அகம் 190 - ↑ .
நெடுங்கால் மாடத்து ஒள்ளெரி நோக்கிக்
கொடுந்திமில் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும் – பட்டினப்பாலை 112 – 113