எண்ணிம நாணய பணப்பை
எண்ணிம நாணய பணப்பை (ஆங்கிலத்தில், Cryptocurrency Wallet)என்பது எண்ணிம நாணயங்களை அணுகுவதற்கும், பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்தும் கருவி ஆகும். பரிமாற்றங்களுக்காகப் பொதுவில் பகிரக்கூடிய முகவரியையும், சூட்சமக்குறியீட்டு சாவியையும் உள்ளடக்கியது எண்ணிம பணப்பை ஆகும். பல பகிரக்கூடிய முகவரிகளையும் ஒரே பணப்பையில் சேமிக்க இயலும்.[1] [2] இப்பணப்பையில் எண்ணிம நாணயங்கள் இருக்காது, அவை ப்ளாக்செயினில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பணப்பை வெறும் முகவரியையும் (பெறுவதற்காக), சாவியையும்(விற்பதற்காக) கொண்டுள்ளது.[3]:93 ஒவ்வொரு எண்ணிம நாணயமும் தனக்கான தனித்துவமிக்க சூட்சமக்குறியீட்டை வைத்திருக்கும். இச்சாவியைக் கொண்டு iஒவ்வொரு பரிமாற்றங்களையும் எண்முறைக் கையொப்பமிட முடியும், அப்போது விற்பனை/பரிமாற்றம் உறுதி செய்யப்படும்.[4]
உசாத்துணை
தொகு- ↑ Liu, Yi; Li, Ruilin; Liu, Xingtong; Wang, Jian; Zhang, Lei; Tang, Chaojing; Kang, Hongyan (29 October 2017). "An efficient method to enhance Bitcoin wallet security". 11th IEEE International Conference on Anti-counterfeiting, Security, and Identification (ASID) (IEEE). https://ieeexplore.ieee.org/document/8285737/. பார்த்த நாள்: 1 September 2018.
- ↑ McGoogan, Sara; Field, Matthew. "What is cryptocurrency, how does it work and what are the uses?". The Telegraph. https://www.telegraph.co.uk/technology/0/cryptocurrency/. பார்த்த நாள்: 14 September 2017.
- ↑ Antonopoulos, Andreas (12 July 2017). Mastering Bitcoin: Programming the Open Blockchain. O'Reilly Media, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781491954386. பார்க்கப்பட்ட நாள் 14 September 2017.
- ↑ Juchisth, Smith. "Wat is cryptocurrency? Een introductie in de blockchain". Cryptostart (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 9 December 2017.