எண்ணுப்பெயர்

[1]

ஒன்று முதல் பத்து

தொகு

பொருள்களைத் தொகைப்படுத்தும்போது தமிழர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, தொண்டு, பத்து என எண்ணிக்கையை ஒன்றொன்றாகக் கூட்டி வளர்த்துக்கொண்டனர்[2]. இந்த வரிசையில் தொண்டு என்னும் சொல் ஒன்பதைக் குறிக்கும்[3]. [4] இந்தச் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே அருகிய வழக்காக மாறிவிட்டது. தொல்காப்பியர் எண்ணுப் புணர்ச்சியை விளக்கும்போது தொண்டு என்னும் சொல்லை விட்டுவிட்டு ஒன்பது என்னும் சொல்லை வைத்தே புணர்ச்சி விதி கூறுகிறார். ஒன்பதை 'ஒன்பான்' என்றும், பத்தைப் "பஃது" என்றும் இலக்கியங்களில் வழங்கினர். பத்து என்னும் சொல் புணர்ச்சியின்போது பான் என விகாரப்படுதலும் உண்டு. இவற்றை அடியில் வரும் சொல்லாக்கங்களில் காணலாம்.

பத்தின் அடுக்கு

தொகு
  • பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று - என்ற முறையில் வளரும்.[5]
  • ஒருபஃது, இருபஃது, முப்பஃது, நாப்பஃது, ஐம்பஃது, அறுபஃது, ஏழ்பஃது, எண்பஃது, தொண்ணூறு - என்ற முறையில் வளரும்.[6]

அளவை முதலானவை வரும்போது[7] [8].

  • அளவைகள் - அகல், ஆழாக்கு, உழக்கு, கலம், சாடி, தூதை, நாழி, பானை, மண்டை - போன்றவை (முகத்தல்) அளவைப் பெயர்கள்
  • அளவைகள் - கழஞ்சு, தொடி, பலம் - போன்றவை (எடுத்தல் என்னும் முகத்தல்) அளவைப் பெயர்கள்
    • ஒருகலம், இருகலம், முக்கலம், நாற்கலம், ஐங்கலம், அறுகலம், ஏழ்கலம், எண்கலம் - என்ற முறையில் வளரும்.
    • ஓருழக்கு, ஈருழக்கு, முவ்வுழக்கு (மூவகல்), நாலுழக்கு, ஐயுழக்கு, ஆறுக்கு, ஏழுழக்கு, எட்டுழக்கு - உயிர் வரும்பொது இவ்வாறு புணரும்
    • ஓரொன்று, ஈரிரண்டு, மும்மூன்று, நந்நான்கு, ஐயைந்து, ஆறாறு, ஏழேழு, எட்டோட்டு - எண் வரும்போது இப்படி வரும்
    • முவ்வட்டி, நால்வட்டி - 'வட்டி' என்னும் முகத்தல் அளவை வரும்போது
    • ஒருபத்தொன்று, இருபத்தொன்று > ... > என வளரும் [9]
    • ஒருபதின் கலம், இருபதின் கலம் > ... > என வளரும் [10]

நூறின் அடுக்கு

தொகு
  • வருமொழி நூறு என வரும்போது ஒருநூறு, இருநூறு, முந்நூறு, நானூறு, ஐந்நூறு, அறுநூறு, எழ்நூறு (எழுநூறு), எண்ணூறு, தொள்ளாயிரம் - என வரும். [11]
  • நூற்றொன்று, நூற்றிரண்டு > ... > என்பது போல் வரும். [12]
  • நூற்றொருபஃது, நூற்றிருபஃது > ... > என்பது போல் வரும் [13]

ஆயிரத்தின் அடுக்கு

தொகு
  • ஆயிரம் என்னும் சொல் வருமொழியாக வரும்போது ஒராயிரம் (ஓராயிரம்), இராயிரம் (ஈராயிரம்), முவ்வாயிரம், நாலாயிரம், ஐயாயிரம், அறாயிரம் (ஆறாயிரம்), ஏழாயிரம், எண்ணாயிரம் (ஏட்டாயிரம்), ஒன்பதிற்றாயிரம் (ஒன்பதாயிரம்), ஒன்பதிற்றுக்கோடி, ஒருநூறாயிரம், இருநாறாயிரம், முந்தூறாயிரம், >... > [14]

அல்பெயர் எண்

தொகு

குறிப்பிட்ட அளவினைக் குறிக்காமல் 'பேரளவு'த் தொகையைக் குறிக்கும் எண்ணுப்பெயர்களைத் தொல்காப்பியம் 'ஐ', 'அம்', 'பல்' என்னும் ஈறுகளைக் கொண்டு முடியும் எனக் குறிப்பிடுகிறது. [15]உரையாசிரியர்கள் 'தாமரை', 'வெள்ளம்', 'ஆம்பல்' எனணும் சொற்களை எண்ணுப்பெயர்களாகக் காட்டுகின்றனர்[16]. 'வெள்ளம்போல் மக்கள் கூட்டம்' என்னும் இக்கால வழக்கில் தொல்காப்பியர் காலத்து வெள்ளம் என்னும் அல்பெயர் எண் தொடர்ந்து புழக்கத்தில் இருந்துவருவதைக் காணமுடிகிறது.

குறைஎண் [17]

தொகு
 
 
 

முக்கால் [18], அரை [19], கால் [20], அரைக்கால் [21], மாகாணி [22][23] [24], நான்மா [25], இருமா [26], மா [27], அரைமா [28], காணி [29], அரைக்காணி [30] முந்திரி [31], கீழ்முந்திரி32 - முதலானவை ஒன்றில் குறைந்த எண்ணுப் பெயர்கள்.

ஒன்றே முக்கால், ஒன்றரை, ஒன்றேகால், ஒன்றே அரைக்கால், ஒன்றே மாகாணி, ஒன்றே மா, ஒன்றே காணி, ஒன்றே முந்திரி - என்ற முறையில் அமையும். [32]

அடிக்குறிப்பு

தொகு
  1. எண்ணுப்பெயர்க் கிளவி உருபு இயல் நிலையும். (தொல்காப்பியம் 1-420)
  2. ஒன்று என,
    இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
    ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
    நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை: (பரிபாடல் 3)
  3. மெய் பெறு மரபின் தொடை வகைதாமே
    ஐ-ஈர் ஆயிரத்து ஆறு-ஐஞ்ஞூற்றொடு
    தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று
    ஒன்பஃது' என்ப-உணர்ந்திசினோரே (தொல்காப்பியம் 3-406)

  4. 'ஒன்பது' என்னும் சொல்லோடு 'என்ப' என்னும் உயிரெழுத்தை முதலாக உடைய சொல் வந்து சேர்வதால், 'ஒன்பது' என்பது 'ஒன்பஃது' என மாறி நிற்கிறது. இது தமிழ் நெறி.
  5. தொல்காப்பியம் 1-434 முதல் 437
  6. தொல்காப்பியம் 1-438 முதல் 445
  7. தொல்காப்பியம் 1-446 முதல் 462
  8. இவை உரையாசிரியரின் எடுத்துக்காட்டுகள்
  9. தொல்காப்பியம் 475
  10. தொல்காப்பியம் 477
  11. தொல்காப்பியம் 1-460 முதல் 463
  12. தொல்காப்பியம் 472
  13. தொல்காப்பியம் 473
  14. தொல்காப்பியம் 471
  15. ஐஅம் பல்லென வரூஉம் இறுதி
    அல்பெய ரெண்ணு1 மாயியல் நிலையும் (தொல்காப்பியம் 1-394)
  16. ஏழு என்னும் எண்ணோடு புணரும்போது அவை ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல் எனப் புணரும் என உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டு தருகின்றனர்.
  17. கீழ்வாய்ச்சிற்றிலக்கம்
  18. (4 ல் 3)
  19. (2 ல் 1)
  20. (4 ல் 1)
  21. (6 ல் 1)
  22. (16 ல் 1)
  23. 1/20 + 1/80 = 4/80 + 1/80 = 5/80 = 1/16
  24. இக்காலத்தில் 'வீசம்' எனவும் கூறுவர்.
  25. (5 ல் 1)
  26. (10 ல் 1)
  27. (20 ல் 1)
  28. (40 ல் 1)
  29. (80 ல் 1)
  30. (160 ல் 1)
  31. (320 ல் 1)
  32. தொல்காப்பியம் 479 உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணுப்பெயர்&oldid=3049735" இலிருந்து மீள்விக்கப்பட்டது