எண்ணெய்க் கப்பல்

எண்ணெய்க் கப்பல் என்பது நிலநெய்யைப் பெருமளவில் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பலொன்றைக் குறிக்கும். எண்ணெய்க் கப்பல்கள் பொதுவாக இரண்டு வகைப்படுகின்றன. ஒன்று கச்சா எண்ணெய்க் கப்பல் மற்றது முடிவு எண்ணெய்க் கப்பல்.[1] கச்சா எண்ணெய்க் கப்பல்கள் எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் இடத்திலிருந்து கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன.[1] முடிவு எண்ணெய்க் கப்பல்கள், சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்திப் பொருட்களை அவை நுகரப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன.

ஒரு சிறிய எண்ணெய்க் கப்பல்

எண்ணெய்க் கப்பல்கள் அவற்றில் அளவு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அளவு அடிப்படையிலான வகைப்பாட்டில் சில ஆயிரம் டன்களைக் (தொன்) கொண்ட உள்நாட்டு அல்லது கரையோரக் கப்பல்கள் முதல் 550,000 டன்கள் எடை கொண்ட பாரிய கப்பல்களை வரை அடங்குகின்றன. எண்ணெய் தாங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் 2,000,000,000 metric tons (2.2×109 short tons) எண்ணெயைக் கொண்டு செல்கின்றன.[2][3] எண்ணெயை இடத்துக்கிடம் கொண்டு செல்லும் முறைகளில் குழாய் வழி கொண்டுசெல்வதற்கு அடுத்தபடியான செயல் திறன் கூடிய முறை கப்பல்வழி கொண்டு செல்வதாகும்.[3] எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் எண்ணெயைக் கொண்டு செல்வதற்கான செலவு, 1 அமெரிக்க கலன் (3.8 L)க்கு 2 அல்லது 3 ஐக்கிய அமெரிக்க சதங்கள் மட்டுமே.[3]

தற்காலத்தில் சிறப்புப் பயன்பாடுகளுக்கான எண்ணெய்க் கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கப்பல்களுக்கு, அவை பயணம் செய்யும்போதே எரிபொருள் நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் அவற்றுள் ஒரு வகையாகும். எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், இவ்வகைக் கப்பல்களுக்கான வடிவமைப்பும், செயற்பாடுகளும் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக உள்ளன.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hayler and Keever, 2003:14-2.
  2. UNCTAD 2006, p. 4.
  3. 3.0 3.1 3.2 Huber, 2001: 211.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெய்க்_கப்பல்&oldid=3910702" இலிருந்து மீள்விக்கப்பட்டது