எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பு
எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பு (reaction control system) (RCS) என்பது திசைவைப்புக் கட்டுப்பாட்டையும் நேரியக்கத்தையும் வழங்க உந்துபொறிகளைப் பயன்படுத்தும் ஒரு விண்கல அமைப்பு ஆகும். மாற்றாக , எதிர்வினை சக்கரங்களும் திசைவைப்புக் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆரியர் குதிப்புத் தாரைக்கலம் போன்ற வழக்கமான இறக்கைகள் கொண்ட விமான வேகத்திற்கு கீழே ஒரு குறுகிய அல்லது செங்குத்துப் புறப்பாட்டுக்கும் தரையிறங்கலுகும் விமானத்தின் நிலைப்புறு திசைவைப்பைக் கட்டுப்படுத்த திசை திருப்பப்பட்ட பொறி உந்துதலைப் பயன்படுத்துவதும் எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பு எனக் குறிப்பிடப்படலாம்.
எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்புகள் தேவைப்படும் எந்த திசையிலும் அல்லது திசைகளின் சேர்மானத்திலும் சிறிய அளவிலான உந்துதலை வழங்கும் திறன் கொண்டவை. ஓர் எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்த திருக்கத்தை வழங்கும் திறன் கொண்டது.[1]
எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்புகள் பெரும்பாலும் வெவ்வேறு அளவிலான துலங்கல்களை அனுமதிக்க பெரிய மற்றும் சிறிய (வெர்னியர் உந்துபொறிகளின்) கூட்டமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "REACTION CONTROL SYSTEM". science.ksc.nasa.gov. Archived from the original on 2000-09-01. பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.
வெளி இணைப்புகள்
தொகு- NASA.gov
- Space Shuttle RCS பரணிடப்பட்டது 2009-05-24 at the வந்தவழி இயந்திரம்