எதிஹாட் அருங்காட்சியகம் (துபாய்)
எதிஹாட் அருங்காட்சியகம்(அரபு மொழி: متحف الاتحاد), வரலாற்றுரீதியாக ஒன்றிங்களின் இல்லம் ஆகும் இது துபாயில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும், இங்கு மரபுரிமை சார்ந்த பொருட்கள் மக்களின் பார்வைக்கு காட்சி படுதப்பட்ள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாரம்பரியம் ,சமூக, அரசியல், கலாச்சார, அறிவியல் மற்றும் இராணுவ வரலாற்று பொருட்களை சேகரிக்கிறது, பாதுகாக்கிறது மற்றும் காட்சிப்படுத்துகிறது. இது பழைய கடவு சீட்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட கலைப்பொருட்கள் வரை அனைத்தையும் வைத்திருக்கிறது. [1] ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசியலமைப்பின் கையொப்பம் இட்டது, முதல் ஐக்கிய அரபு எமிரேட் கொடியை ஏற்றியது மற்றும் இந்த அருங்காட்சியகம் அமைந்த இடத்தில் 1971 டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு நாடாக உருவானது. ஐக்கிய அரபு அமீரக அரசியலமைப்பில் கையெழுத்திட்டதைக் குறிக்கும் ஆவணமாக இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
متحف الإتحاد | |
நிறுவப்பட்டது | 2 December 2016 |
---|---|
அமைவிடம் | 1 ஜுமேரா சாலை, துபாய், United Arab Emirates |
ஆள்கூற்று | 25°14′N 55°16′E / 25.23°N 55.26°E |
வகை | அருங்காட்சியகம் |
வலைத்தளம் | etihadmuseum |
வரலாறு
தொகு1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட் உருவானதைக் குறிக்கும் அறிவிப்பில் அமீரகத்தின் நிறுவன தந்தைகள் கையெழுத்திட்ட இடமான ஒன்றிங்களின் இல்லம் இந்த அருங்காட்சியகம் உள்ளடக்கியுள்ளது.இது இப்போது அருங்காட்சியகதின் ஒரு பகுதியாகும். [2]
கட்டிடம்
தொகுஇந்த அருங்காட்சியகத்தை மோரியாமா & டெஷிமா கட்டிடக் கலைஞர்கள் கையெழுத்துப் பிரதி வடிவத்தில் வடிவமைத்தனர்.அசல் அறிவிப்பில் கையெழுத்திடப் பயன்படுத்தப்படும் பேனாக்களைப் போலவே ஏழு நெடுவரிசைகள் அருங்காட்சியகத்தில் கட்டப்பட்டுள்ளன.இந்த அருங்காட்சியகத்தில் எட்டு பார்வையாளருக்கான கட்டிடம் உள்ளன: [3]
பார்வையாளருக்கான கட்டிடம் ஒன்று: ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாறு குறித்த ஆவணப்படம் திரையிட படுகிறது.
பார்வையாளருக்கான கட்டிடம் இரண்டு: ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பு உருவாவதற்கு முந்தைய காலத்தை சிறப்பிக்கும் பரந்த பரஸ்பர ஊடாடும் வரைபடம்.
பார்வையாளருக்கான கட்டிடம் மூன்று: ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பு உருவாவதற்கு முந்தைய காலத்தை முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நிரூபிக்கும் ஒரு ஊடாடும் காலவரிசை.
பார்வையாளருக்கான கட்டிடம் நான்கு: மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் காட்சிகளை காணலாம்.
பார்வையாளருக்கான கட்டிடம் ஐந்து: ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பு உருவான வரலாறுகளை காணும் ஊடாடும் வழிகாட்டி.
பார்வையாளருக்கான கட்டிடம் ஆறு: 1971 க்கு முன்னர் அமீரகத்தின் நிறுவன தந்தைகள் எதிர்கொண்ட முக்கியமான தருணங்களுக்கும் சவால்களுக்கும் ஒரு மீள் பார்வை.
பார்வையாளருக்கான கட்டிடம் ஏழு: இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசியலமைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளருக்கான கட்டிடம் எட்டு: புதிதாகப் பிறந்த தேசத்தைக் கொண்டாடும் புகை படகாட்சி.
மேலும் காண்க
தொகு- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கலாச்சாரம்
குறிப்புகள்
தொகு- ↑ Ghazal, Rym (5 January 2017). "Etihad Museum opening in Dubai to tell the story of the UAE" (in en-US). The National. http://www.thenational.ae/uae/heritage/etihad-museum-opening-in-dubai-to-tell-the-story-of-the-uae.
- ↑ Time Out Dubai staff (5 January 2017). "Etihad Museum open to the public on Saturday January 7" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
- ↑ McFarlane, Nyree (4 December 2016). "The new Etihad Museum opens to the public next month" (in en-US). What's On Dubai (UAE). http://whatson.ae/dubai/2016/12/the-new-etihad-museum-has-been-inaugurated/.