எத்தில்தொலுயீன்

வேதித் தனிமங்களின் ஒரு குழு

எத்தில்தொலுயீன் (Ethyltoluene) என்பவை CH3C6H4CH2CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச் சேர்மங்களை குறிக்கும். 1,2- 1,3- மற்றும் 1,4- எத்தில்தொலுயீன் என இதே வாய்பாட்டில் மூன்று மாற்றியங்கள் காணப்படுகின்றன. இவை மூன்றும் நிறமற்ற நீர்மங்கள். இவை நீருடன் கலக்காது. அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் எனவும் இவை வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு மெத்தில் குழு , ஒரு எத்தில் குழு என இரண்டு பதிலீடுகள் பென்சீன் வளையத்தில் இடம்பெற்றுள்ளன.[1]

Cymenes
பெயர் 2-எத்தில்தொலுயீன் 3-எத்தில்தொலுயீன் 4-எத்தில்தொலுயீன்
கட்டமைப்பு வாய்ப்பாடு
சிஏஎசு எண் 611-14-3 620-14-4 622-96-8
உருகுநிலை  -80.8  -95.5  -62.3
கொதிநிலை (°C) 165 161.3 162

தயாரிப்பு

தொகு

எத்திலீனுடன் தொலுயீனைச் சேர்த்து ஆல்க்கைலேற்ற வினையை நிகழ்த்துவதன் மூலம் எத்தில்தொலுயீனை தயாரிக்கலாம்.

CH3C6H5 + CH2=CH2 → CH3C6H4CH2CH3

அலுமினியம் முக்குளோரைடு போன்ற பல்வேறு இலூயிசு அமிலங்களால் இந்த ஆல்க்கைலேற்ற வினை வினையூக்கப்படுகிறது. 3- மற்றும் 4-எத்தில்தொலுயீன்கள் முக்கியமாக மெத்திசிடைரீன்கள் தயாரிப்பில் முன்னோடிச் சேர்மங்களாக உள்ளன:

CH3C6H4CH2CH3 → CH3C6H4CH=CH2 + H2

இந்த ஐதரசன் நீக்க வினை துத்தநாக ஆக்சைடு வினையூக்கியின் முன்னிலையில் நடத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Schmidt, Roland; Griesbaum, Karl; Behr, Arno; Biedenkapp, Dieter; Voges, Heinz-Werner; Garbe, Dorothea; Paetz, Christian; Collin, Gerd; Mayer, Dieter; Höke, Hartmut (2014). "Hydrocarbons". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. pp. 1–74. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a13_227.pub3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527306732.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்தொலுயீன்&oldid=4046234" இலிருந்து மீள்விக்கப்பட்டது