என்பு நாட்டத் தனிமம்
என்பு நாட்டத் தனிமம் என்பது, மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் உடலில் சேரும் போது என்புகளில் உள்ள கால்சியத்தைப் பதிலீடு செய்துவிட்டு அதில் ஒருங்குகுவியும் தனிமங்கள் ஆகும். இவை பெரும்பாலும் ஒரு கதிரியக்க அணுக்கரு மூலகங்களாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, இசுட்ரோன்சியம் மற்றும் ரேடியம் இரசாயன ரீதியாக கால்சியத்திற்கு ஒத்தவையாக இருப்பதுடன் இவை என்புகளில் உள்ள கால்சியத்தை பதிலீடுசெய்யும்.[1][2] புளுட்டோனியம் தனிமமும் என்பு நாட்டமுள்ள ஒரு பொருள் ஆகும். இருப்பினும் என்பு இழையங்களில் அது குவியும் வழிமுறை தெரியவில்லை.[3]
கதிரியக்க என்பு நாட்ட மூலகங்கள் சுற்றியுள்ள இழையங்களை கதிர்வீச்சுக்கு உட்படுத்துவதால் சுகாதார அபாயங்கள் ஏற்படுத்துகின்றன. இருப்பினும் கதிர் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ரேடியம்-223 இந்த வழியிலேயே சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.[2][4] அதிகப்படியான இசுட்ரோன்சியம் உறிஞ்சப்படுதல் என்புருக்கி நோய் அதிகரிப்புடன் தொடர்புபட்டுள்ளது. [5][6] இருப்பினும், இசுட்ரோன்சியம் ரனிலேட் உப்பு ஒரு என்பு நாட்டப்பொருள் ஆயினும் இது சில நேரங்களில் எலும்புப்புரைநோய்க்குச் சிகிச்சையாக எலும்பை வலுப்படுத்த பயன்படுகிறது. [7] பாதிக்கப்பட்ட எலும்பு இழையங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குவதற்கான ஒரு முறையாகவும் என்பு நாட்டத் தனிமங்கள் முன்மொழியப்படுகின்றன.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Radionuclide Basics: Strontium-90". www.epa.gov (in ஆங்கிலம்). 15 April 2015. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ 2.0 2.1 Suominen, Mari I.; Wilson, Timothy; Käkönen, Sanna-Maria; Scholz, Arne (10 August 2019). "The Mode-of-Action of Targeted Alpha Therapy Radium-223 as an Enabler for Novel Combinations to Treat Patients with Bone Metastasis". International Journal of Molecular Sciences 20 (16): 3899. doi:10.3390/ijms20163899. பப்மெட்:31405099.
- ↑ Vidaud, Claude; Miccoli, Laurent; Brulfert, Florian; Aupiais, Jean (26 November 2019). "Fetuin exhibits a strong affinity for plutonium and may facilitate its accumulation in the skeleton". Scientific Reports 9 (1): 17584. doi:10.1038/s41598-019-53770-6. பப்மெட்:31772265. Bibcode: 2019NatSR...917584V.
- ↑ Marques, I.A.; Neves, A.R.; Abrantes, A.M.; Pires, A.S.; Tavares-da-Silva, E.; Figueiredo, A.; Botelho, M.F. (July 2018). "Targeted alpha therapy using Radium-223: From physics to biological effects". Cancer Treatment Reviews 68: 47–54. doi:10.1016/j.ctrv.2018.05.011. பப்மெட்:29859504.
- ↑ Ozgur, S; Sumer, H; Kocoglu, G (1 December 1996). "Rickets and soil strontium.". Archives of Disease in Childhood 75 (6): 524–526. doi:10.1136/adc.75.6.524. பப்மெட்:9014608.
- ↑ RELEVANCE TO PUBLIC HEALTH (in ஆங்கிலம்). Agency for Toxic Substances and Disease Registry (US). April 2004. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
- ↑ Blake, Glen M; Fogelman, Ignac (December 2006). "Strontium ranelate: a novel treatment for postmenopausal osteoporosis: a review of safety and efficacy". Clinical Interventions in Aging 1 (4): 367–375. doi:10.2147/ciia.2006.1.4.367. பப்மெட்:18046914.
- ↑ Rotman, Stijn G.; Thompson, Keith; Grijpma, Dirk W.; Richards, Robert G.; Moriarty, Thomas F.; Eglin, David; Guillaume, Olivier (March 2020). "Development of bone seeker–functionalised microspheres as a targeted local antibiotic delivery system for bone infections". Journal of Orthopaedic Translation 21: 136–145. doi:10.1016/j.jot.2019.07.006. பப்மெட்:32309139.