என்றி இரெபெல்லோ
இந்தியத் தடகள வீரர்
என்றி மால்கம் இரெபெல்லோ (Henry Malcolm Rebello) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். என்றி மால்கம் இரெபெல்லோ என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1928 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மும்முறை தாண்டும் விளையாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக இவர் பங்கேற்று விளையாடினார். 1948 ஆம் ஆண்டு இலண்டனில் நடந்த இந்தியாவின் முதல் சுதந்திர ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். இந்திய விமானப்படையில் 1980 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் கர்னலுக்கு இணையாகக் கருதப்படும் ஒரு குழு தலைவராக பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தனிநபர் தகவல் | |
---|---|
பிறந்த பெயர் | என்றி மால்கம் இரெபெல்லோ |
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | இலக்னோ, பிரித்தானிய இந்தியா | 17 நவம்பர் 1928
இறப்பு | 27 ஆகத்து 2013 குருகிராம் | (அகவை 84)
விளையாட்டு | |
விளையாட்டு | மும்முறை தாண்டல் |
நிகழ்வு(கள்) | 1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: ஆண்கள் மும்முறை தாண்டல் |
என்றி இரெபெல்லோ 2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் தேதியன்று காலமானார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ PTI (27 August 2013). "Former athlete Henry Rebello dead". The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/former-athlete-henry-rebello-dead/article5064759.ece. பார்த்த நாள்: 22 July 2018.