என்றி பாசுட்டர்

பிரித்தானிய அரசு நாவாய் அலுவலரும் அறிவியலாளரும்

என்றி பாசுட்டர் (Henry Foster) (1797 – 5 பிப்ரவரி 1831)ஓரு பிரித்தானிய அரசு நாவாய் அலுவலரும் வானியலாளரும் அறிவியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் பெரும்பிரித்தானிய மாவீரர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் ஆர்க்டிக், அண்டார்க்டிக் புவிமுனைத் தேட்டங்களில் கலந்துகொண்டு பல அரிய நோக்கிடுகளைப் பதிவு செய்தார்.

வாழ்க்கைப்பணி தொகு

இவர் 1797 இல் இலங்காசயரில் உள்ள வுடுபிளம்ப்டனில் பிறந்தார். இளமையிலேயே அரசு கடலியல் நிறுவனத்தில் சேர்ந்தார்.[1]

இவர் தன் தொடக்கக் கால வாழ்வில் எச். எம். எசு. யார்க்கு(1807) கலத்திலும் பின்னர், எச். எம். எசு. கிரிப்ப(1813) கலத்திலும் வெளிநாடுகளில் பயணித்துள்ளார். இவர் 1823 இல், பிரித்தானிய நாவாய் அறிவியல் தேட்டத்தின் ஒரு பகுதியாக, தவுகிலாசு மேற்கொண்ட ஆர்க்டிக் தேட்டப் பயணத்தில் பங்கேற்றார். இவர் எடுவார்டு சாவைனுக்கு வானியற் பணிகளில் உதவி செய்துள்ளார். மேலும், இவர் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆனார்.[1]

இவர் 1824 இல், படைத்தலைவர் வில்லியம் எடுவார்டு பாரியின் வடக்கிழக்குக் கணவாய்த் தேட்டத்தில் தளபதியாக எச். எம். எசு கெக்ளா கலத்தில் இணைந்து சென்றுள்ளார். இந்தத் தேட்டத்தில் இவர் காந்தவியல், வானியல், தனி ஊசல், ஈர்ப்பு சார்ந்த அறிவியல் நோக்கீடுகளை எடுத்துள்ளார். இப்பணிகளுக்காக இவருக்கு 1827 இல் கோப்பிளே பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், கட்டளைத் தளபதியாகவும் பதவி உயவும் பெற்றுள்ளார். பின்னர், 1827 இல், மீண்டும் பிரித்தானிய நாவாய் வடக்கிழக்குத் தேட்டத்தில் பாரியின் தலைமையில் கலந்துகொண்டார்.[1]

இவர் 1828 இல் இருந்து 1831 வரை எச். எம். எசு. சான்ட்டிக்கிளேர்(1808) மரக்கலத்தின் கட்டளைத் தளபதியாக இருந்தார். தெற்கு அட்லாண்டிக் பிரித்தானிய நாவாய்த் தேட்டத்தை வழிநடத்தினார். தெற்கு செட்லாந்து தீவுகளைக் குறிப்பாக அண்ட்டார்க்டிக் தீவகத்துக்குச் சேய்மையில் இருந்த திசெப்சன் தீவை அளக்கை செய்தார்ழ் இந்தத் தேட்டம் கடற்கரைகளையும் நில உருவாக்கங்களையும் அளக்கையிட்டது; இரு அரைக்கோளங்களிலும் அமைந்த கடல்நீரோட்டங்களின் திசைப் போக்கைத் தீர்மானித்தது.[2]இவர் தியேர தெல் பியூகோ தீவகத்தில் உள்ள இன்றைய சிலியான வொலாசுட்டன் தீவுகளுக்கு பிரித்தானிய வேதியியலளரான வில்லியம் கைதே வொலாசுட்டன் பெயரை இட்டார். கடற்கரைகளையும் கடல் நீரோட்டங்களையும் ஆய்வு செய்தது மட்டுமின்றி, கேட்டரின் மாறா தனி ஊசலைப் பயன்படுத்தி ஈர்ப்புசார் நோக்கீடுகளையும் பதிவு செய்தார்.[2]இந்த அளக்கை பெர்னாண்டோ தெ நொரோணா திவுகளையும் தீவகத்தையும் உள்ளடக்கியது. கணிசமான நல்கைகளை ஆளுநரிடம் இருந்து பெற்று இவர் தன் வீட்டின் ஒரு பகுதியையே தனி ஊசல் ஆய்வுகளுக்கும் செய்முறைகளுக்கும் பயன்படுத்தினார்.[3] இவரது ஆய்வுகள் அடங்கிய நூல் இவர் இறந்த பிறகு, 1834 இல் வெளியிடப்பட்டது .[2]


இவர் மரக்கலத்தில் இருந்து வழுக்கிப் பனாமா சாகிரசு ஆற்றில் 1831 இல் விழுந்துள்ளார். இவர் இறந்த பிறகு, வெளியிடப்பட்ட இவரது நூலில் தென் அரைக்கோள வான் நோக்கீடுகள் அடங்கியிருந்தமையால் மிகவும் பெயர்பெற்றது. இந்நூல் பிரெஞ்சுமொழியில் பெயர்க்கப்பட்டுப் பிறகு 1849 இல் வெளியிடப்பட்டுள்ளது.[1]

நூல்கள் தொகு

  • தெற்கு அட்லாண்டிக் பயண உறவு, 1828-1831 ஆண்டுகளில் செய்த இராயல் கார்வெட்டி சான்ட்டிக்கிளயர் சார்பில் மேற்கொண்ட பயனம் (London, 1834).[2]

பெறுமதியும் தகைமையும் தொகு

  • திசெப்சன் தீவில் உள்ள பாசுட்டர் துறைமுகமும் சுமித் தீவில் உள்ள பாசுட்டர் மலையும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன. ஏலும், இலாங்கு தெக்சாசில் உள்ள நடுநிலை பல்ளி ஒன்றும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Appletons' Cyclopedia of American Biography, 1600-1889 (II ). New York: D. Appleton & Company. 1887. பக். 510. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Image of 'sketches of the island of fernando noronha', south atlantic, 1828-1831". Science Museum. Science & Society Picture Library. பார்க்கப்பட்ட நாள் 24 February 2012.
  3. FitzRoy, R. (1839) Narrative of the surveying voyages of His Majesty's Ships Adventure and Beagle between the years 1826 and 1836, London: Henry Colburn, pp. 24–26.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_பாசுட்டர்&oldid=3765873" இலிருந்து மீள்விக்கப்பட்டது