என். ஆர். டி. தேனியில் ஒரு தியாக வரலாறு (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
என். ஆர். டி. தேனியில் ஒரு தியாக வரலாறு எனும் இந்த நூல் 88 பக்கங்களுடன் 1/8 டெம்மி அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
என். ஆர். டி. தேனியில் ஒரு தியாக வரலாறு | |
---|---|
நூல் பெயர்: | என். ஆர். டி. தேனியில் ஒரு தியாக வரலாறு |
ஆசிரியர்(கள்): | முகமது சபி |
வகை: | தமிழ் |
துறை: | வாழ்க்கை வரலாறு |
இடம்: | அய்யா வெளியீட்டகம், அய்யா புத்தக நிலையம், 30, மதுரை சாலை, தேனி - 625 531. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 88 |
பதிப்பகர்: | அய்யா வெளியீட்டகம் |
பதிப்பு: | ஜனவரி 2013. |
ஆக்க அனுமதி: | ஆசிரியர்க்கு |
நூலாசிரியர்
தொகுமுகமது சபி மின்னணு மற்றும் தொலைதொடர்புப் பொறியியலில் பட்டயப்படிப்பு படித்தவர்.கவிதை, கட்டுரை போன்றவைகளைச் சிற்றிதழ்களிலும், நாளேடுகளிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சிறந்த மேடைப்பேச்சாளர். தேனி தென் தேன் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், டி.ஐ.எம்.எஸ். மாற்று மருத்துவ அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
பொருளடக்கம்
தொகுஇந்திய விடுதலைப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், மதுரை மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவர், தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றிய என். ஆர். டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் என். ஆர். தியாகராசன் வாழ்க்கை வரலாறு இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
இளமைக் காலம், விடுதலைப் போராட்டமும் அரசியல் பிரவேசமும், தீரர் சத்தியமூர்த்தியின் பாராட்டு, என்.ஆர்.டி திருமணம், தேச விடுதலையோடு மக்களுக்கான போராட்டம், சிறை வாழ்க்கை, ஆகஸ்ட் புரட்சி, தியாகத்தைச் சொல்லும் நாட்குறிப்பு, காமராஜரும் என்.ஆர்.டியும், பெரியாரும் என்.ஆர்.டியும், ஒரு லட்சம் தொண்டர்கள் கொண்ட படை திரட்ட முயன்ற என்.ஆர்.டி, சமூகச் சீர்திருத்தம், மதுரை மாவட்டக் கழக ஆட்சித் தலைவர், கல்வி வளர்ச்சி, காந்தியத்திற்கும் தியாகிகளுக்கும் என்.ஆர்.டியின் பங்களிப்பு, அஞ்சாநெஞ்சர் என்.ஆர்.டி, தொண்டர்களைக் காத்த தலைவர், தேனி சட்டசபை உறுப்பினராக, கூட்டுறவு இயக்கவாதியாக என்.ஆர்.டி, கூட்டுறவு சங்கத் தலைவராக, தமிழக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவராக, தேனி மாவட்ட வளர்ச்சி, தேனியின் சிற்பி என்.ஆர்.டி, இறுதி மூச்சு வரை மக்கள் பணி, நினைவு போன்ற தலைப்புகளில் என். ஆர். டி. யின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
பின்னிணைப்புகளாக என்.ஆர்.டிக்கு தலைவர்கள் வழங்கிய புகழாரம், நினைவுத் துளிகள், என்.ஆர்.டியின் நினைவுகளாக, என்.ஆர்.டியின் அரிய புகைப்படங்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கின்றன.