என். எம். ஆர். கிருட்டிணமூர்த்தி

இராவ் பகதூர் என். எம். ஆர். கிருட்டிணமூர்த்தி (1910-) செளராட்டிர சமூகத் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

பிறப்பு

தொகு

கிருட்டிணமூர்த்தி மதுரையில் புகழ் பெற்ற ’இராயலு’ குடும்பத்தில் நாட்டாமை மல்லி. என். எம். இராயலு அய்யருக்கு 1910ல் பிறந்தார். காந்தீயத் தலைவர் என். எம். ஆர். சுப்பராமனின் இளைய சகோதரர் ஆவர்.

ஆற்றிய சமுகப் பணிகள்

தொகு

சௌராட்டிர சமூகத்தில் இராவ் பகதூர். (கோபுளா) கே. எம். எஸ். இலக்குமணய்யருக்கு அடுத்தபடியாக பெருந்தலைவராக மதிக்கப்பட்டார். சௌராட்டிர மத்திய சபையின் சோதனையான காலகட்டங்களில் திருச்சி. சுப்பைய்யருடன் மிகவும் திறமையாக நடத்திச் சென்றார். கால் நூற்றாண்டாக நடைபெறாமல் இருந்த சௌராட்டிர மத்திய சபையின் மாநாட்டை 1981ல் மதுரையில் நடத்தி சௌராடடிர மக்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றவர். மதுரை சௌராட்டிர கல்லூரி கட்டிட நிதிக்காக தமிழ்நாடு முதல்வர் எம் ஜி ஆரை சந்தித்து தேவையான உதவிகள் பெற்று வந்தார். இவரது முயற்சியால் தற்போதைய முதல்வர் செயலலிதா சௌராட்டிர கலை கல்லூரி கட்டிட நிதிக்காக பரதநாட்டியம் நிகழ்ச்சி நடத்தி இலட்சக்கணக்கில் நன்கொடை வசூலித்து வழங்கினார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் ”தக்கார்” ஆக இருந்தபோது மீனாட்சியம்மன் பட்டாபிசேகத்தின் போது செங்கோல் ஏந்தினார். சௌராட்டிர மத்திய சபையின் அலுவலகம் இவருடைய சொந்த கட்டிடத்தில் வாடகையின்றி இயங்குவதற்கு இறுதிவரைக்கும் அனுமதி கொடுத்தார்.

வகித்த பதவிகள்

தொகு

சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரை, சௌராட்டிர கலைக் கல்லூரி, நடனகோபாலநாயகி மந்திர், கீதாபவனம், மதுரை-இராமநாதபுரம் வணிகர்கள் சங்கம், யூனியன் கிளப், முதலிய சமூக நிறுவனங்களில் தலைவர் உட்பட பல பதவிகள் வகித்தவர்.

தொழில்

தொகு

ராயல் டாக்கீஸ் திரைப்படத் தயாரிப்பு & விநியோக நிறுவனம் மற்றும் சிந்தாமணி திரையரங்கம் ஆகிய நிறுவனங்களில் தனது மூத்த சகோதர்களுடன் நிர்வகித்தவர். மேலும் சௌராஷ்டிர மேனிலைப் பள்ளி மற்றும் மதுரை சௌராஷ்டிரா சபையின் தலைவராக பணியாற்றியவர்.

உசாத்துணை நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு