என். எஸ். சீனிவாசன்
என். எஸ். சீனிவாசன் (பிறப்பு: 1933) இந்திய சாலைகள் மேம்பாட்டில் பங்குபற்றிய தமிழர்.
வாழ்க்கையும், கல்வியும்
தொகுஇவர் வேலூரில் பிறந்தவர். தந்தை என். சோமசுந்தர ஐயர், தாயார் ஞானாம்பாள்-விடுதலைப் போராட்ட தியாகிகள். வசதியான குடும்பம் என்றாலும் விடுதலைப் போராட்டத்தால் சொத்து முழுவதையும் இழந்தனர். வேலூர் நகராட்சிப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். தந்தை சிறையில் இருக்க தாயார் நோய்வாய் பட்டிருக்க சிரமமான நிலையில் இவரது கல்வி தொடர்ந்தது. வேலூர் கல்லூரியில் இண்டர்மீடியட் முடித்தார். பொறியியல் கல்லூரியில் சேர மதிப்பெண் இருந்தும், பணம் இல்லை. பல ஆண்டுகள் விடுமுறையில் வேலைபார்த்துச் சேமித்து வைத்திருந்த, பணத்தைக்கொண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அப்போதும் விடுமுறையில் வேலைக்குச் சென்றுவிடுவார். பெரும் போராட்டத்துக்குப் பிறகு பி.இ. (சிவில்), பி.இ. (நெடுஞ்சாலை) பட்டங்களை பெற்றார். இவரது திறமையால், உதவித் தொகையுடன் ஜெர்மனிக்கு சென்று படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்குப் போக்குவரத்துப் பொறியியலில் முனைவர் பட்டம் வாங்கினார்.
பணிகள்
தொகுதில்லி வந்து மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவரது முயற்சியால் தில்லி சாலைகள் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக மேம்பட்டன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளையொட்டி தில்லி நகர மேம்பாடு இவரிடம் ஒப்படைக்கப் பட்டது. தாஜ்மகாலைச் சுற்றி அழகிய சாலைவசதி செய்துதந்தார். இவரது திறமையை அறிந்த பல வெளிநாடுகள் வேண்டி, விரும்பி அழைத்தன. உலகத்தமிழ் மாநாட்டையொட்டி தஞ்சை நகரம் இவரால் மெருகேறியது. சென்னையில் இவரால் பல சாலைமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
விருதுகள்
தொகு- குடியரசுத் தலைவர் விருது
- நதீர்ஷா விருது [1]
குறிப்புகள்
தொகு- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்64