என். ஏ. நூர் முகம்மது

என். ஏ. நூர் முகம்மது என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்துக்கு தற்கால கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 1953 தேர்தலில் கல்குளம் தொகுதியில் இருந்து திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளராக, 1954 தேர்தலில் பத்மனாபபுரம் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்ததற்கு முன்னர் நடந்த இந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஏ._நூர்_முகம்மது&oldid=2711703" இருந்து மீள்விக்கப்பட்டது