என். பி. அப்துல் ஜப்பார்

என். பி. அப்துல் ஜப்பார் (16 ஆகத்து, 1919 - 26 ஆகத்து 1995, நாச்சியார்கோவில்). 'என்.பி.ஏ.' என்று பரவலாக அழைக்கப்பட்ட இவர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர் . தந்தையார் பா. தாவூத்ஷாவின் தாருல் இஸ்லாம் மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்து சிறுகதைகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதினார். தந்தை பா. தாவூத்ஷாவுடன் இணைந்து திருக்குர்ஆன் விரிவுரை எழுதி வெளியிடும் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றையும் எழுதி வெளியிட்டார்.

1941 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை மாணவராக இருந்தபோதும், அதற்குமுன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்ற காலத்திலேயும் தமிழ்மொழிப் புலமைக்கான பரிசுகளைப் பெற்றவர்.[சான்று தேவை] பள்ளி மாணவப் பருவத்திலேயே தாருல் இஸ்லாம் இதழில் எழுதத் தொடங்கியவர். 1940 இல் ஒரு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பி._அப்துல்_ஜப்பார்&oldid=4018831" இலிருந்து மீள்விக்கப்பட்டது