என். வி. காமராஜ்

என். வி. காமராஜ் (பிறப்பு: 21 மே, 1963) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், வேதாரண்யம் தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) கட்சியைச் சேர்ந்தவர்.[1]

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வேட்பு மனுவை காமராஜர் பெறவில்லை. அதிமுக கட்சியின் சார்பில் ஓ. எஸ். மணியன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் 2016 ஆம் ஆண்டு சூலையில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அக்டோபர் மாதம் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார், அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கு அணுக முடியாதது என்றும், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினருடன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர் விளக்க முடியவில்லை என்றும் கூறினார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

காமராஜ் 21 மே 1963 இல் வேதாரண்யத்தில் பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "150 AIADMK cadres join DMK, BJP in run up to local body polls". The Times of India. 7 October 2016. http://timesofindia.indiatimes.com/city/chennai/150-AIADMK-cadres-join-DMK-BJP-in-run-up-to-local-body-polls/articleshow/54726277.cms. பார்த்த நாள்: 2017-05-04. 
  3. "Thiru. N.V. Kamaraj (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._வி._காமராஜ்&oldid=3546235" இலிருந்து மீள்விக்கப்பட்டது