என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்தக் கொலைவெறிடா
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்தக் கொலைவெறிடா அல்லது தமிழ்க் கொலைவெறி... யாழ். பதிப்பு (Tamil Kolaiveri) என்பது வொய் திஸ் கொலவெறி டி பாடலை தழுவி யாழ்ப்பாணக் கலைஞரான எஸ். ஜெறி ஸ்ராலின் அதே மெட்டில் பாடப்பட்ட கவர் பாடலாகும்.[1] இப்பாடல் 2012ஆம் ஆண்டு சனவரி முதலாம் திகதி யூடியூப் இணையத்தளத்தில் யாழ் மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[2]
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்தக் கொலைவெறிடா | ||||
---|---|---|---|---|
| ||||
வெளியீடு | 2012 சனவரி 1 | |||
ஒலிப்பதிவு | 2011 | |||
இசைப் பாணி | பாடல் | |||
நீளம் | 4.26 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | யாழ் மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | எஸ். ஜெறி ஸ்ராலின் | |||
எஸ். ஜெறி ஸ்ராலின் காலவரிசை | ||||
|
இந்தப் பாடலுக்கான வரிகளையும் எஸ். ஜெறி ஸ்ராலின் எழுதியுள்ளார். படப்பிடிப்பை வர்ணனும் தொகுப்பை அமலனும் மேற்கொண்டுள்ளார்கள். இப்பாடல் இணையத்தளத்தில் வெளியாகி 3 நாட்களுக்குள் யூடியூபில் மட்டும் 1 இலட்சத்து 24 பேருக்கு மேல் பார்த்தார்கள்[3]. திசம்பர் இருபத்தைந்தாந் திகதி வரை இப்பாடலை 393,915 பேர் பார்த்துள்ளனர். இதற்கு அடுத்ததாகக் காதல் மொழி என்ற பாடலையும் எஸ். ஜெறி ஸ்ராலின் பாடியுள்ளார்.[4]
வொய் திஸ் கொலவெறி டி
தொகுதமிங்கிலம் என்ற ஆங்கிலம் கலந்த நடையில் பாடப்பட்ட வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலை விமர்சித்துள்ளதுடன் தமிழ் மொழியின் பெருமைகளையும் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்களையும் இப்பாடலில் எஸ். ஜே. ஸ்ராலின் குறிப்பிட்டுள்ளார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ் கொலைவெறி (யாழ்ப்பாணம்)
- ↑ தமிழ்க் கொலைவெறி உயர் வரையறுத்தல் (யாழ்ப்பாணப் பதிப்பு)
- ↑ என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..., ஸ்ராலினுடன் நேர்காணல் கண்டவர்: அஸ்வின், வீரகேசரி வாரமஞ்சரி, சனவரி 21, 2012
- ↑ காதல் மொழி-காதல் மொழி
- ↑ தமிழ்க் கொலைவெறி உயர் வரையறுத்தல் (யாழ் பதிப்பு)