எமரால்டு ஏரி, உதகமண்டலம்
எமரால்டு ஏரி (Emerald Lake) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு கிராமத்தில் அமைந்துள்ளது.[1] இந்தப் பகுதி அமைதிப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.[2] இது உதகமண்டலம் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.[3]
எமரால்டு ஏரி, உதகமண்டலம் | |
---|---|
அமைவிடம் | தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம் |
ஆள்கூறுகள் | 11°19′41″N 76°37′08″E / 11.328°N 76.619°E |
உறைவு | இல்லை |
Islands | இல்லை |
சுற்றுலா
தொகுஎமரால்டு ஏரி இந்த வட்டாரத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் ஆகும்.[2] மேலும் இந்த ஏரியில் உள்ள பல்வேறு மீன்களாலும், இங்கு காணப்படும் பறவைகளாலும் பிரபலமானது. இந்த ஏரிக்கு அருகில் இருந்து கதிரவன் தோற்றத்தையும், மறைவையும் காணுவது கண்ணுக்கினிய காட்சி என அறியப்படுகிறது. ஏரியைச் சுற்றித் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்துள்ளன, இங்கு பார்வையாளர்களால் தேயிலைப் பொருட்களை வாங்க முடியும்.[2]
ரெட் ஹில் இயற்கை விடுதி
தொகுரெட் ஹில் இயற்கை விடுதி என்ற பெயரில் ஏரியின் பக்கத்தில் சுற்றுலாவாசிகளுக்காக ஒரு விடுதி உள்ளது. இந்த விடுதியில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்குகிறது. விடுதியைச் சுற்றி தேயிலை தோட்டங்கள் சூழப்பட்ட அமைப்பில் உள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு விடுதி நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக மலையில் வண்டியோட்டுதல், பறவை நோக்குதல், ஏரியைச் சார்ந்த பகுதியில் மீன்பிடித்தல், வனநடை ஆகியவை அடங்கும்.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Emerald Lake". traveldest.org.
- ↑ 2.0 2.1 2.2 "EMERALD LAKE". ooty-tourism.com.
- ↑ 3.0 3.1 "Ooty Sightseeing" பரணிடப்பட்டது 2012-02-05 at the வந்தவழி இயந்திரம். ootyhotels.org.