எமிலி அவுசுடாலெட்

ஜியான் - பிரடெரிக்-எமிலி அவுசுடாலெட்டு (Jean-Frédéric Émile Oustalet)(24 ஆகத்து 1844 - 23 அக்டோபர் 1905) என்பவர் பிரான்சு நாட்டினைச் சார்ந்த விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் பறவையியலுக்கு பெரிதும் பங்களித்துள்ளார்.[1]

அவுசுடாலெட்டு

அவுசுடாலெட்டு தூப்சு துறையில் மான்ட்பெலியார்டில் பிறந்தார். இவர் உயர் கல்விப் பள்ளியில் கல்வி பயின்றார். இவரது முதல் அறிவியல் பணி தட்டாரப்பூச்சிகளின் இளம் உயிரிகள் சுவாச உறுப்புகள் குறித்ததாக இருந்தது. இவர் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணியாற்றினார். இங்கு இவர் ஜூல்ஸ் வெர்ரோக்ஸுக்குப் பிறகு 1875-ல் உதவி-இயற்கை நிபுணராக பதவியேற்றார். 1900ஆம் ஆண்டில் இவர் அல்போன்ஸ் மில்னே-எட்வர்ட்ஸ்க்குப் பிறகு பாலூட்டியியல் பேராசிரியரானார்.[1]

 
1903ஆம் ஆண்டு ஓவியம், பேராசிரியர் அவுசுடாலெட்டின் ஆய்வகத்தில் டோடோவை மறுகட்டமைத்தல்

பறவைகள் ஆய்வு

தொகு

அருங்காட்சியகம் இந்தோ-சீனா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து புதிய மாதிரிகளைப் பெறத் தொடங்கியபோது அவுசுடாலெட்டு பறவைகள் மீது தனது ஆர்வம் காட்டினார். இவர் சீனாவின் பறவைகள் மீது சிறப்பு அக்கறை கொண்டு, அர்மண்ட் டேவிடுடன் இணைந்து சீனாவின் பறவைகள் (Les Oiseaux de la Chine) என்ற புத்தகத்தை 1877-ல் எழுதினார். மேலும் 1899-ல் கம்போடியாவின் பறவைகள் (Les Oiseaux du Cambodge) என்ற புத்தகத்தினையும் எழுதினார்.[1] 1883ஆம் ஆண்டில், பிராங்கோவிலிருந்து பெறப்பட்ட மாதிரி ஒன்றைத் தனிச் சிற்றினமான பாசர் பிராங்கோயென்சிசு (Passer brancoensis) என விவரித்தார்.[2][3] இது வெவ்வேறு தீவுகளிலிருந்து பெறபப்ட்ட லாகோ சிட்டுக்குருவிகள் இடையே வேறுபாடுகளை அவதானிப்பதாகக் கூறிய பார்ன் என்பவர்பாசர் லேங்கோயென்சிசு பிராங்கோயென்சிசு என்ற துணையினமாக அங்கீகரித்தார்.[4]

வியன்னா (1884), புடாபெஸ்ட் (1891), லண்டன் (1905) ஆகிய இடங்களில் நடந்த பன்னாட்டு பறவையியல் மாநாட்டில் அவுசுடாலெட் கலந்து கொண்டதோடு பாரிசு மாநாட்டிற்குத் (1900) தலைமை தாங்கினார்.[5]

பெருமை

தொகு

வாத்து இனம் அனசு அவுசுடாலெட்டி இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. மலகாசி பச்சோந்தி சிற்றினம், புர்சிபர் அவுசுடாலெட்டி[6] பிரான்சுவா மொக்கார்டால் அவுசுடாலெட் நினைவாக பெயரிடப்பட்டது.

இறப்பு

தொகு

அவுசுடாலெட் பல வாரங்கள் நோய்வாய்ப்பட்ட பிறகு செயின்ட் காஸ்டில் (கோட்ஸ்-டு-நோர்ட்) இறந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

தொகு
  • 1874 : Recherches sur les insectes fossiles des terrains tertiaires de la France, (பிரான்சில் இருந்து மூன்றாம் நிலை பூச்சி படிமங்களின் ஆராய்ச்சி).
  • 1877 : அர்மண்ட் டேவிட், Les Oiseaux de la Chine, (The Birds of China, இரண்டு தொகுதிகள்).
  • 1878 : Alphonse Milne-Edwards உடன், Études sur les Mammifères et les Oiseaux des Îles Comores, (கொமோரோ தீவுகளின் பாலூட்டிகள் மற்றும் பறவைகள் பற்றிய ஆய்வுகள்).
  • 1880-1881 : Monographie des oiseaux de la famille des mégapodiidés, (Megapodiidae குடும்பத்தின் பறவைகளின் மோனோகிராஃப், இரண்டு பாகங்கள்).
  • 1889 : Oiseaux dans le compte rendu de la mission scientifique du Cap Horn. 1882-1883, (கேப் ஹார்னின் அறிவியல் பணியின் அறிக்கையில் பறவைகள். 1882-1883).
  • 1893 : La Protection des oiseaux, (The Protection of Birds) — 1895 இல் மறுபதிப்பு செய்யப்பட்டு 1900 இல் மீண்டும் திருத்தப்பட்டது.
  • 1895 : Les Mammifères et les Oiseaux des îles Mariannes, ( மரியானா தீவுகளின் பாலூட்டிகள் மற்றும் பறவைகள், இரண்டு பாகங்கள்).
  • 1899 : Oiseaux du Cambodge, du Laos, de l'Annam et du Tonkin, (கம்போடியா பறவைகள், லாவோஸ், அன்னம் மற்றும் டோன்கின்).

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Hellmayr, C.E. (1906). "Emile Oustalet [obituary"]. Ornithologische Monatsberichte 14 (4): 57-59. https://archive.org/details/ornithologischem14berl. 
  2. Summers-Smith (1988). The Sparrows. pp. 93–94.
  3. "Description et Énumération des Espèces" (in fr). Actes de la Société Linnéenne de Bordeaux 38. 1883. https://www.biodiversitylibrary.org/page/26188335. 
  4. Bourne WRP (1955). "The Birds of the Cape Verde Islands". Ibis 97 (3): 508–556. doi:10.1111/j.1474-919X.1955.tb04981.x. 
  5. Blasius, Rudolf (1906). "Jean Frederic Emile Oustalet". Ornithologische Monatsschrift: 297-302. https://archive.org/details/ornithologischem3119deut/page/297/mode/1up. 
  6. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. ("Oustalet", p. 198).
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_அவுசுடாலெட்&oldid=3845324" இலிருந்து மீள்விக்கப்பட்டது