எம். ஆர். ஆர். இராதாகிருஷ்ணன்
எம். ஆர். ஆர். இராதாகிருஷ்ணன் (M. R. R. Radhakrishnan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியினைச் சார்ந்தவர். விவசாயம் செய்துவரும் இராதாகிருஷ்ணன் 10ஆம் வகுப்பு வரை பெரியகுப்பத்தில் உள்ள பள்ளியில் படித்துள்ளார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]