எம். எம். ஆசன்

இந்திய அரசியல்வாதி

எம். எம். ஆசன் (M.M. Hassan) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் மற்றும் கேரள அரசின் முன்னாள் அமைச்சராவார்.[1]

எம்.எம்.ஆசன்
தலைவர், கேரளப் பிரதேச இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்
பதவியில்
25 மார்ச்சு 2017 – 18 செப்டம்பர் 2018
முன்னையவர்வி.எம். சுதீரன்
பின்னவர்முள்ளப்பள்ளி இராமச்சந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மே 1947 (1947-05-14) (அகவை 76)
திருவனந்தபுரம் திராவன்கோர், ஆங்கில அரசு இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்திருமதி எ.கே. ரகியா
பிள்ளைகள்ஒரு மகள்
பெற்றோர்மாலிக் மொகமது மற்றும் பாத்திமா பீ
வாழிடம்திருவனந்தபுரம்
கல்விசட்டத்தில் பட்டப்படிப்பு
தொழில்வழக்கறிஞர்

வாழ்க்கை தொகு

ஆசன் 1947 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தார். கேரள மாணவர் ஒன்றியம் ஆசனை அரசியலுக்கு அழைத்து வந்தது. படிப்படியாக இவர் கேரள மாணவர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவராக உயர்ந்தார். கேரளப் பல்கலைக்கழகச் செயற்குழுவில் ஓர் உறுப்பினராகவும் மற்றும் ஒரு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆசன் கழக்கூட்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கேரள சட்டமன்ற உறுப்பினராக 1980 மற்றும் 1982 ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1987 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மேற்கு திருவனந்தபுரம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு மீண்டும் பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு காயம்குளம் தொகுதியின் சார்பாக கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அ.கு. ஆன்டனி அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.[1] ஆசன் கேரள சட்டமன்றத்தில் மலையாளிகள் அல்லாதவர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

ஆசன் சட்டப் படிப்பில் இளைஞர் பட்டம் பெற்றவர் ஆவார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "M.M. HASSAN :: STATE OF KERALA". Archived from the original on 10 May 2010. பார்க்கப்பட்ட நாள் 28 August 2010.
  2. "Hassan takes up expatriates' problems". தி இந்து. 11 March 2004 இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040414092815/http://www.hindu.com/2004/03/11/stories/2004031103810500.htm. பார்த்த நாள்: 28 August 2010. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எம்._ஆசன்&oldid=3586335" இலிருந்து மீள்விக்கப்பட்டது