எம். எஸ். கே. இராஜேந்திரன்
இந்திய அரசியல்வாதி
எம். எஸ். கே. இராஜேந்திரன் (M. S. K. Rajendran; பிறப்பு 15 செப்டம்பர் 1948) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இராமநாதபுரம் நகரைச் சார்ந்த இவர், இராமநாதபுரத்தில் உள்ள ராஜா உயர் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் முடித்துள்ளார். இதன் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்று வழக்கறிஞராக இருந்தார்.[1] இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழகச் சட்டப்பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
எம். எஸ். கே. இராஜேந்திரன் | |
---|---|
பதவியில் 1989–1991 | |
தொகுதி | இராமநாதபுரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1948 இராமநாதபுரம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | 32 வடக்கு ரத வீதி, இராமநாதபுரம் |