எம். எஸ். தோனி (திரைப்படம்)
எம். எஸ். தோனி (M.S. Dhoni: The Untold Story ) என்பது 2016 ஆண்டு வெளியான ஓர் இந்திய, தன்வரலாற்று விளையாட்டுக் கதைத் திரைப்படம். இதை எழுதி இயக்கியவர் நீரஜ் பாண்டே. இப்படம் இந்திய தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்த மகாந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்பட்ம். இத்திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரமான தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார் பிற பாத்திரங்களில் திஷா பட்டனி, கெய்ரா அத்வானி, அனுபம் கெர், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை தோனியின் இளம் வயது வாழ்க்கையில் இருந்து துவங்கி, வாழ்க்கை நிகழ்வுகள் தொடர்ச்சியாக காட்டப்பட்டு, இறுதியாக துடுப்பாட்ட உலகினில் அவர் நட்சத்திர அந்தஸ்து பெறுவதில் முடிவடைகிறது.
எம். எஸ. தோனி: சோல்லப்படாத கதை | |
---|---|
இயக்கம் | நீரஜ் பாண்டே |
தயாரிப்பு | அருண் பேண்டே பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
கதை | நீரஜ் பாண்டே (உரையாடல்) |
மூலக்கதை | மகேந்திரசிங் தோனி |
திரைக்கதை | நீரஜ் பாண்டே திலிப் ஜா |
இசை | பாடல்கள்: அமால் மாலிக் ரோசாக் கோலி Score: சஞ்சீவ் சௌத்ரி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சந்தோஷ் துண்டைல் |
படத்தொகுப்பு | ஸ்ரீ நாராயண் சிங் |
கலையகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இன்ஸ்பிரைட் எண்டர்டெயின்மெண்ட் ஃபிரைடே பிலிம் ஒர்க்ஸ் |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | செப்டம்பர் 30, 2016 |
ஓட்டம் | 190 நிமிடம்[1] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி தமிழ் |
ஆக்கச்செலவு | ₹104 கோடி[2] |
மொத்த வருவாய் | ₹215.48 கோடி[3] |
இதுதொடர்பான நொடர்பான யோசனை தோனியிடம் அவரது மேலாளர், அருண் பாண்டேவால், 2011 உலகக் கோப்பை துடுப்பாட்ட இறுதிப் போட்டிக்குப் பிறகு சொல்லப்பட்டது. தோனியின் சம்மதத்துடன் இரண்டு ஆண்டுகள் அதற்கான வேலைகள் தொடர்ந்தன. பின்னர் இயக்குநர் நீரஜ் பாண்டே தனது பேபி திரைப்படத்தின் வேலை செய்து கொண்டிருந்த போது படம் குறித்து, அணுகினார். தோனியிடம் ஆலோசித்த, பாண்டே தோனியின் பின்னணி மற்றும் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை ஆராய்வதற்கு பலரை சந்தித்தார்.
இந்தப் படம் 2016 செப்டம்பர் 30 அன்று பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவால் வெளிடப்பட்டது. இப்படம் 61 நாடுகளில் அப்போது வெளியிடப்பட்டது. இப்படம் இந்தியில் வெளிவந்தது, மேலும் இப்படம் மொழிமாற்றாக தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளி்லில் தயாரிக்கப்பட்டது. எதிர்ப்புகள் வந்த காரணத்தினால் மராத்திய மொழிபெயர்ப்பு இரத்து செய்யப்பட்டது. இப்படம் வணிகரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் 2016 ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படங்களில் அதிகபடியாக வசூலித்த படங்களில் ஐந்தாவது இடமாக ₹1.16 பில்லியன் (US$15 மில்லியன்) தொகை வசூலித்தது.[4]
கதைச்சுருக்கம்
தொகுதோனியின் தந்தை பான் சிங் (அனுபம் கெர்) பம்ப் ஆபரேட்டர் வேலையில், சிறிய அடுக்குமாடி குடியிருப்பில், அன்பான குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன் மகன் தோனி நன்றாக படிக்க வேண்டும், தன்னைப் போல பம்ப் ஆபரேட்டர் வேலை பார்க்க கூடாது என விரும்புகிறார். தோனிக்கு விளையாட்டில் மிக விருப்பம். பள்ளியில் கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பிங்கில் நன்கு ஆடுவதைக் கண்ட, பார்த்த பள்ளி பயிற்சியாளர் பானர்ஜி தோனியை துடுப்பாட்டத்தில் விக்கெட் கீப்பிங் செய்யச் சொல்கிறார். அங்கிருந்து தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையும், படத்தின் கதையும் துவங்குகிறது.
துடுப்பாட்டம் ஆட வந்த பிறகு, கூச் பீகார் டிராபி, துலீப் டிராஃபி என அடுத்தடுத்து பெரிய பெரிய போட்டிகளில் ஆடும் அளவுக்கு விரைவில் வளர்கிறார் தோனி. தோனி ஆட வந்தால் எதிரணி மிரள்வதும், பந்துகள் பறந்து தொலைவதும், ஆட்டத்தை பார்க்க பள்ளி மாணவர்கள் கூடுவதுமாக திரைக்கதை நகர்கிறது. ஒரு கட்டத்தில் இந்திய இரயில்வே அணிக்கு ஆட வாய்ப்பு கிடைக்கிறது இரயில்வேயில் வேலையும் கிடைக்கிறது. அப்பாவின் விருப்பத்துக்காக வேலைக்குச் செல்கிறார் தோனி. ஆனால் வேலை அவருக்கு பிடிக்காமல் போக, வேலையை விட்டுவிடுகிறார். அதன் பின்னர் தோனி எப்படி இந்திய அணிக்குள் நுழைந்தார், தோனியின் முதல் காதல் என்ன ஆனது, சாக்ஷியை கரம் பிடித்தது எப்படி? அணித்தலைவராக தோனி என்னவெல்லாம் செய்தார் என்பது படத்தின் பிற்பகுதி கதை.
மேற்கோள்கள்
தொகு- ↑ M.S. Dhoni – The Untold Story 2016 Movie News, Wallpapers, Songs & Videos. Bollywood Hungama. Retrieved on 20 September 2016.
- ↑ Sarkar, Prarthna. "M. S. Dhoni: The Untold Story: Sushant Singh Rajput beats Salman Khan with this film".
- ↑ Hungama, Bollywood. "Box Office: Worldwide Collections and Day wise breakup of M.S. Dhoni - The Untold Story - Bollywood Hungama".
- ↑ "MS Dhoni: The Untold Story 12-day box office collection: Will Sushant-starrer beat Akshay's Rustom lifetime record?". 12 October 2016. பார்க்கப்பட்ட நாள் 13 October 2016.