எம். ஐ. எம். இஸ்மாயில் பாவா

எம்.ஐ.எம். இஸ்மாயில் பாவா (பிறப்பு 1937) பக்கீர்பைத் துறையில் ஈடுபாடு கொண்ட ஒரு சிரேஷ்ட கலைஞராவார்.

இஸ்மாயில் பாவா
Ismailbaba.jpg
பிறப்பு1937
தமிழ் நாடு, இளையான்குடி

வாழ்க்கை வரலாறுதொகு

புத்தளத்தை வதிவிடமாகக் கொண்ட பக்கீர் பரப்பரையைச் சேர்ந்த இவர், தமிழ் நாடு, இளையான்குடி, சுல்தான் அலிசா கலாபத்துன் ரிபாய் பக்கீரின் பேரனாவார். இவர் பழைய டில்லி பக்கீர் சிக்கந்தர் அலிசா பரப்பரையின் வாரிசாவார்.

திருமணமாகி ஏழு பெண் மக்களின் தந்தையான இவர், தன் சிறுபராயம் முதல் சலிக்காது, சளைக்காது புத்தளத்தின் பெருந்தெருக்கள் எங்கும் நோன்பு மாதத்தில் மக்களை அதிகாலையில் எழுப்பும் பணியினை 'தாயிலா ரபான்' பைத்தொலியுடன் செய்து வருகின்றார்.

இலங்கை வானொலியில்தொகு

இலங்கையில் அருகிவரும் இசைக்கலைகளுள் ஒன்றான பக்கீர்பைத் துறையில் சிறுவயது முதல் ஈடுபாடு செலுத்தியவரும் சிரேஷ்ட கலைஞரான இவரின் இத்தகைய பக்கீர்பைத்துக்கள் 1962ல் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் 15 நிமிடங்கள் வீதம் 29 வாரங்கள் ஒலிபரப்பாகி, இலங்கை உட்பட, தமிழ்நாடு, மலேசியா முதலிய கடல்கடந்த நாடுகளில் கூட பலரின் பாராட்டைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் 'நூறு மசாலா', 'பக்கீர் பைத்'தை 'தாயிலா ரபான்' இசைக் கருவியுடன் இசைத்தார்.

மேடைகளில்தொகு

வானொலி நிகழ்ச்சிகளை அடுத்து கிடைக்கப்பெற்ற அழைப்புக்களின் பேரில், புத்தளத்தை அண்டியுள்ள பல ஊர்களிலும், தீவடங்கிலுமுள்ள ஏனைய பல ஊர்களிலும் பல நிகழ்ச்சிகளை மேடை ஏற்றியுள்ளார். 'கொழும்பு மாப்பிள்ளை' என்ற நாடகத்திலும் இவரது பாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பொது நிகழ்ச்சிகளில்தொகு

'ஜல்லியத்', 'ஜரபு' முதலான பரம்பரைக்குரிய தொழிலையும் ரிபாய்ராத்திபு நிகழ்ச்சிகளில் நடத்திவரும் இவர், மறைந்த - இப்போது இருக்கின்ற பல அரசியல் தலைவர்களினதும் சமுதாயப் பெரியார்களினதும் பாராட்டுதல்களை தன் குரல்வளத்தினால் பெற்றுக் கொண்டமையை கௌரவமாகக் கருதுகின்றார்.

விருதுகள்தொகு

  • முன்னாள் தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக இருந்த ஏ.எல். அப்துல் மஜீத் பொற் பதக்கம் வழங்கி கௌரவித்தமை.
  • 1994-ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு 'வாழ்வோரை வாழ்த் துவோம்' நிகழ்ச்சியில் இவருக்கு 'நூருல் கஸீதா' (கவிதை ஒளி) விருது வழங்கி கௌரவித்தமை.

ஆதாரம்தொகு

'வாழ்வோரை வாழ்த்துவோம்' நினைவு மலர், வெளியீடு: முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் - 1994.

வெளி இணைப்புகள்தொகு