எம். குமரன்

எம். குமரன் (பிறப்பு: டிசம்பர் 27, 1939) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'மலபார் குமார்' என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தன்முனைப்புப் பயிற்சியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1960 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவர் சில மலையாளக் கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துமுள்ளார்.

நூல்கள்

தொகு
  • "செம்மண்ணும் நீல மலர்களும்" (குறுநாவல் - 1971)
  • "சீனக் கிழவன்" (சிறுகதைத் தொகுப்பு - 1970)

பரிசில்களும் விருதுகளும்

தொகு

இவரது கதைகளும் குறுநாவல்களும் பல பரிசுகள் வென்றுள்ளன.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._குமரன்&oldid=3236229" இலிருந்து மீள்விக்கப்பட்டது