எம். கோதண்டபாணி
இந்திய அரசியல்வாதி
எம். கோதண்டபாணி (M. Kothandapani) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 2016ஆம் ஆண்டு நடைப்பெற்றச் சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவரைச் சபாநாயகர் ப. தனபால் தகுதி நீக்கம் செய்தார்.[3][4]