எம். சுப்பராய அய்யர்
எம். சுப்பராய அய்யர் (M. Subbaraya Aiyar) என்பவர் பழைய சென்னை மாகாணத்தின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மராயூர் நகரில் பிறந்தார். இவருடைய காலம் 1885 முதல் 1963 வரையுள்ள காலமாகும். ஒரு புகழ் பெற்ற வருமான வரித்துறை வழக்கறிஞரும், கொடையாளருமாக இவர் கருதப்படுகிறார்.[1]. மராயூர் கிராமத்தில் தம் இளம்பருவ வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிறுவனாக இருந்த பொழுதே சென்னையில் குடிபுகுந்தார். சென்னையில் உள்ள சென்னை கிருத்துவ கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்ற இவர், 1910 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சே.ப. இராமசுவாமி தலைவராக இருந்த சட்டக்குழுவில் ஒரு வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தார். அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினரான அல்லாடி கிருட்டிணசாமி அய்யர் அக்காலகட்டத்தில் இவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தமிழ் நடிகர் கமலகாசனின் தந்தை அல்லாடி சிறீனிவாச அய்யருடன் இணைந்தும் செயல்பட்டார். வருமான வரி சட்டப் பிரிவில் பணியாற்றி அடைந்த வெற்றியைத் தொடர்ந்து இவர் விவேகானந்தா கல்லூரி, வித்யா மந்திர் [2] மற்றும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சென்னை தொழில் நுட்ப நிறுவனம் ஆகிய மூன்று கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chandrashekaran, K. "A SILENT MAN OF ACTION". A SILENT MAN OF ACTION. Archived from the original on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 August 2011.
- ↑ "Vidya Mandir history". Archived from the original on 2018-04-05. பார்க்கப்பட்ட நாள் 2017-10-19.