எம். ஜி. சங்கர் ரெட்டியார்
எம். ஜி. சங்கர் ரெட்டியார் (M. G. Sankar Reddiyar) ஒரு இந்திய சமூக சேவகர், தொழில்முனைவோர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தனது வாழ்நாளில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு 1957 ஆம் ஆண்டு மற்றும் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக நாங்குனேரி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவர் மக்களுக்காகவும் அவரது தொகுதியின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகுருவையா ரெட்டியார், சுப்பம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்த இவர், தனது படிப்பைத் தொடர இலங்கைக்குச் சென்றார். தொழில்முனைவு உணர்வு எம். ஜி. சங்கரை மென்பான பானங்கள் வணிகத்தில் ஈடுபட தூண்டியது. "விம்டோ ஹவுஸ்" என்ற பெயரில் அவர் தயாரித்த பானங்கள் அந்த நேரத்தில் இலங்கைத் தீவில் பணியாற்றிய பிரித்தானிய இராணுவத்தினரிடையே பிரபலமாக இருந்தன. அவரது வணிகம் வளர்ந்து தீவில் வேர் ஊன்றியது. இந்தியா திரும்பிய இவர், நாங்குனேரிக்கு அருகில் குடியேறி தனது தொழில்முனைவு மற்றும் சமூக சேவை செயல்களைத் தொடர்ந்தார். சங்கர் ரெட்டியார் 1962 ஆம் ஆண்டு திசம்பர் 25 நாள் தனது மூன்றாவது முறையாக பதவி வகித்தபோது இறந்தார்.