எம். ஜி. சுரேஷ்

தமிழ் எழுத்தாளர்

எம். ஜி. சுரேஷ் (இறப்பு: அக்டோபர் 2, 2017) தமிழ் இலக்கிய வரலாற்றில் பின் நவீனத்துவப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர்.[1] [2]1970 களில் தமது எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர் தீபம், கணையாழி உள்ளிட்ட இதழ்களில் புதுக்கவிதை எழுதினார். இளவேனிலின் தூண்டுதலால் எழுதிய, இவர் சிறுகதையானது, கார்க்கி பத்திரிகையில் முதன்முதலில் வெளிவந்தது. இவரின் அட்லாண்டிஸ் மனிதன், அலெக்சாண்டர் ஆகிய இரு புதினங்கள் தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.ஏ பட்டப் படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இவரின் படைப்புகளை ஆய்வு செய்து பலர் முனைவர், இளமுனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவர் மொத்தம் ஆறு புதினங்கள், மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று குறுநாவல்கள் எழுதியுள்ளார். இவருடைய கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நேர்காணல்கள் போன்றவையும் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பன்முகம் (2001 – 2005) என்னும் காலாண்டு இதழையும் அவர் நடத்திவந்தார்.

தொழில்

தொகு

இவர் அரசுத்துறையில் தணிக்கையாளராகப் பணியாற்றினார். இலக்கியத்தின் மீதுதான ஈடுபாட்டால், அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் பெற்றார்.

விருதுகள், பாராட்டுகள்

தொகு
  • திருப்பூர் தமிழ்ச்சங்கம் இவரது அட்லாண்டிஸ் மனிதன், மற்றும் சிலருடன் ஆகிய புதினங்களுக்கு விருது வழங்கியது
  • 37 என்ற புதினத்துக்க காலச்சுவடும் உயிர்மையும் விழா எடுத்து பாராட்டி இருக்கின்றன.
  • இவரது அட்லாண்டிஸ் புதினம் மூன்றாம் தர நாடுகளின் நாவல்களிலே மிக முக்கியமானது என்று கோவை ஞானி சொல்லியுள்ளார்.

படைப்புகள்

தொகு

புதினங்கள்

தொகு
  • இரண்டாவது உலகைத் தேடி
  • கான்க்ரீட் வளம்
  • தாஜ்மகாலுக்குள் சில எலும்புக்கூடுகள்
  • கனவுலகவாசியின் நனவுலகக் குறிப்புகள் முதலான சிறுகதைத் தொகுப்பும்,
  • அட்லாண்டிஸ் மனிதன்
  • மற்றும் சிலருடன்
  • அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்
  • யுரேகா என்றொரு நகரம்
  • சிலந்தி
  • 37

கட்டுரைத் தொகுப்புகள்

தொகு
  • அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே
  • பின் நவீனத்துவமும் உளவியலும்
  • இஸங்கள் ஆயிரம்

பாராட்டுகளும் விருதுகளும்

தொகு

திருப்பூர் தமிழ்ச்சங்கம் இவரது அட்லாண்டிஸ் மனிதன், மற்றும் சிலருடன் ஆகிய புதினங்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தது. 37 என்ற புதினத்துக்குக் காலச்சுவடும் உயிர்மையும் விழா எடுத்து பாராட்டி இருக்கின்றன. இவரது அட்லாண்டிஸ் நாவல் மூன்றாம் தர நாடுகளின் நாவல்களிலே மிக முக்கியமானது என்று கோவை ஞானி சொல்லியுள்ளார்.

திரையுலகில் பணிகள்

தொகு

கலைஞர் மு.கருணாநிதியின் 'காவலுக்குக் கெட்டிக்காரன் " திரைப்படத்திலும், தென்பாண்டிச் சிங்கம் எனும் தொலைக்காட்சித் தொடரிலும் பணியாற்றியுள்ளார். இவர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காவலுக்குக் கெட்டிக்காரன், உன்னை ஒன்று கேட்பேன், கண்ணே கனியமுதே, என் தமிழ் மக்கள், அழகி, இயற்கை ஆகியத் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "எம்.ஜி.சுரேஷ்: சாகசத்தன்மை கொண்ட எழுத்தாளர்", Hindu Tamil Thisai, 2017-10-06, பார்க்கப்பட்ட நாள் 2024-06-24
  2. "பின்நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது – அஜயன்பாலா", தமிழ் வலை (in அமெரிக்க ஆங்கிலம்), 2017-10-03, பார்க்கப்பட்ட நாள் 2024-06-24

வெளி இணைப்புகள்

தொகு
  • சிவதாணு - உதயம் நேர்காணல்கள் பக்கம்-97
  • கோவை ஞானி- தமிழ்நாவல்களில் தேடலும் திரட்டலும் மெய்யப்பன் பதிப்பகம் பக்கம்-97.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜி._சுரேஷ்&oldid=4022313" இலிருந்து மீள்விக்கப்பட்டது