எம். பழனியாண்டி

மருதையா பழனியாண்டி (Maruthaiya Palaniyandi) (10 திசம்பர் 1918 - 9 மார்ச் 2005) ஒரு இந்திய அரசியல்வாதியாக மற்றும் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும் பின்னர் தமிழ் மாநில காங்கிரசு கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார். [1]

மருதையா பழனியாண்டி
பெரம்பலூர் மக்களவை
பிரதமர்சவகர்லால் நேரு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1918-12-10)10 திசம்பர் 1918
இறப்பு9 மார்ச்சு 2005(2005-03-09) (அகவை 86)
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு,
தமிழ் மாநில காங்கிரசு
துணைவர்எம்.புனிதவள்ளி
தொழில்அரசியல்வாதி

சொந்த வாழ்க்கை

தொகு

பழனியாண்டி 1918ஆம் ஆண்டு திசம்பர் 10ஆம் நாள் பிறந்தார். திருமதி எம். புனிதவள்ளியை மணந்தார். இத்தம்பதியருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உண்டு.

அரசியல்

தொகு

பழனியாண்டி பத்தாம் வகுப்பு படிப்பை முடித்த பின், அரசியலில் நுழைந்து தொழிற்சங்கத் தலைவரானார். 1952ஆம் ஆண்டு லால்குடியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டு மற்றும் 1957ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பெரம்பலூர் மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். பழனியாண்டி 1957 முதல் 1962 வரை மக்களவையில் உறுப்பினராக இருந்தார்.1986 முதல் 1992 வரை இவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1983 முதல் 1988 வரை இந்திய தேசிய காங்கிரசின் தமிழக குழுவின் தலைவர் ஆவார். 1996-ல் தமிழ் மாநில காங்கிரசில் ஜி. கே. மூப்பனாருடன் இணைந்தாா்.

இறப்பு

தொகு

2005 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் நாள் திருச்சியில் இறந்தார்.[2],[3]

வெளி இணைப்புகள்

தொகு
  1. Rajya Sabha Biography|publisher=Rajya Sabha[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Former TNCC president deadTimesofindia.
  3. Former State Congress President Palaniyandi dead பரணிடப்பட்டது 2005-03-21 at the வந்தவழி இயந்திரம்The Hindu
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பழனியாண்டி&oldid=3460344" இலிருந்து மீள்விக்கப்பட்டது