எம். பிரனேஷ்

எம். பிரனேஷ் 5 சனவரி 2023 அன்று சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் 79வது கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டார்.[1] [2]16 வயதான பிரனேஷ் காரைக்குடியைச் சேர்ந்த முதல் கிராண்ட்மாஸ்டர், தமிழகத்திலிருந்து 28வது கிராண்ட் மாஸ்டர் ஆவார். பிரனேஷ் இந்த நிகழ்வுக்கு முன்னதாக மூன்று விதிமுறைகளை முடித்திருந்தார். ஃபிட் சர்க்யூட்டின் முதல் போட்டியான ரில்டன் கோப்பையின் வெற்றியாளராக இந்தியாவைச் சேர்ந்த எம். பிரனேஷ் 22வது தரவரிசையில், ஸ்டாக்ஹோமில் களம் இறங்கி, 8 ஆட்டங்களில் வென்று, சர்வதேச செஸ் மாஸ்டர்களான கான் குசுக்சாரி (ஸ்வீடன்) மற்றும் செஸ் கிராண்ட் மாஸ்டர் நிகிதா மெஷ்கோவ்ஸ் (லாட்வியா) ஆகியோரை விட முழுப் புள்ளியையும் பெற்றுள்ளார்.[3]

ஸ்வீடனில் நடைபெற்ற 2022/2023 ரில்டன் கோப்பைப் போட்டி டிசம்பர் 27 முதல் ஜனவரி 5 வரை நடைபெற்றது மற்றும் 29 தேசிய கூட்டமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 136 வீரர்களை ஒன்றிணைத்தது. இந்த வெற்றிக்காக அவர் பெறும் 6.8 சர்க்யூட் புள்ளிகளுடன் எம். பிரனேஷ் தற்போது பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு போட்டியின் ஆரம்பச் சுற்றில் தலைவராக உள்ளார். ஆண்டின் இறுதிக்குள் அதிகப் புள்ளிகளைக் குவிப்பவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு வேட்பாளராக எம். பிரனேஷ் தகுதி பெறுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பிரனேஷ்&oldid=3637712" இலிருந்து மீள்விக்கப்பட்டது