எம். பி. ஆர் அணை

எம்.பி.ஆர் அணை (MPR Dam) என்பது நடு பென்னா நீர்த்தேக்கம் என்பதன் சுருக்கம் என்றாலும் எம்.பி.ஆர் அணை என்றே அறியப்படுகிறது. இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பென்னா ஆற்றின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு நீர்ப்பாசனத் திட்ட அணையாகும்.[1] பத்ராம்பள்ளி மற்றும் வச்ரகரூர் கிராமங்களில் இவ்வணை கட்டப்பட்டுள்ளது. துங்கபத்திரா அணையில் தோன்றும் துங்கபத்திரா உயர்மட்ட கால்வாயின் கீழ் ஒரு சமநிலைப்படுத்தும் அணையாக செயல்படுவதே இவ்வணையின் பிரதானமான பணியாகும்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._ஆர்_அணை&oldid=2558022" இருந்து மீள்விக்கப்பட்டது