எம். வின்சென்ட்

எம். வின்சென்ட் (M. Vincent) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 1977 மற்றும் 1980 தேர்தல்களில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக 1986 முதல் 1992 வரை இந்திய மாநிலங்களவையில் பணியாற்றினார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-24.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-07-24.
  3. "List of Rajya Sabha members". Archived from the original on 2009-01-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வின்சென்ட்&oldid=3545884" இலிருந்து மீள்விக்கப்பட்டது