எம். வி. இராச்சசேகரன்
இந்திய அரசியல்வாதி
எம்.வி. இராச்சசேகரன் (M. V. Rajasekharan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1928 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டார். கர்நாடக அரசின் மேலவையில் கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். இந்திய அரசின் திட்டமிடல் துறை அமைச்சராகவும் இருந்தார். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று காலமானார்.[1][2]
எம். வி. இராச்சசேகரன் M. V. Rajasekharan | |
---|---|
2004 ஆம் ஆண்டில் இராச்சசேகரன் | |
மாநில திட்டக்குழு அமைச்சகம் இந்திய அரசு | |
பதவியில் 23 மே 2004 – 6 ஏப்ரல் 2008 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
பின்னவர் | வே. நாராயணசாமி |
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை | |
பதவியில் 2002–2008 | |
தொகுதி | கருநாடகம் |
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1967–1971 | |
பின்னவர் | சி.கே.இயாபர் செரீபு |
தொகுதி | கர்நாடகா மக்களவைத் தொகுதி |
கர்நாடக சட்டமன்றக் குழு உறுப்பினர் | |
பதவியில் 2008–2014 | |
தொகுதி | சட்டமன்ற உறுப்பினர்களால் தெரிவு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 செப்டம்பர் 1928 |
இறப்பு | 13 ஏப்ரல் 2020 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 91)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கிரிச்சா இராச்சசேகரன் |
பிள்ளைகள் | 4 |
வாழிடம் | புது தில்லி |