எம். வி. சீதாராமையா

இந்தியக் கல்வியாளர்

எம். வி. சீதாராமையா (M. V. Seetharamiah) ( கன்னடம் : ಎಂ.ವಿ.ಸೀತಾರಾಮಯ್ಯ,; 9 செப்டம்பர் 1910 - 12 மார்ச் 1990) இராகவா என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓர் அறிஞரும், பேராசிரியரும், ஆய்வாளரும், கன்னட எழுத்தாளருமாவார். [1] பின்னர், “மாதிரி ஆசிரியர்” எனப் புகழப்பட்டார். இவருக்கு கர்நாடக சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

அந்தக் காலத்து சிறந்த ஆசிரியர்களும், கன்னட இலக்கியத்தின் முன்னோடிகளுமான பி. எம். ஸ்ரீகாந்தையா, டி. எஸ். வெங்கண்ணையா, அ. ரா. கிருஷ்ணா சாஸ்திரி, டி. என். ஸ்ரீகாந்தையா, டி. எல். நரசிம்மாச்சர் ஆகியோரின் கீழ் இவர் வந்தார்.

ஆரம்ப காலம்

தொகு

செப்டம்பர் 9, 1910 இல் மைசூரில் அறிஞர்கள் குடும்பத்தில் பிறந்த இவர், 1933 இல் மைசூர் மகாராஜா கல்லூரியில் கன்னடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பணிகள்

தொகு

1934 இல், கன்னட இலக்கிய அமைப்பின் செயலாளராக பணியாற்றினார். டி. வி. குண்டப்பா அப்போது அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.

1939 முதல் 1946 வரை, மைசூர் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலம்-கன்னட அகராதியின் உதவி ஆசிரியராக இருந்தார். பெங்களூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 1946 இல் சேர்ந்து 1967 ல் ஓய்வு பெற்றார். இவர், பண்டையெழுத்துமுறை மீது சிறப்பு ஆர்வம் காட்டினார். மேலும், பல கன்னடக் கையெழுத்துப் பிரதிகளில் புதிய நுண்ணறிவுகளை வழங்கினார். பல இலக்கிய விருதுகளையும், கௌரவங்களைப் பெற்ற இவர், கன்னட இலக்கிய மரபின் பிரகதிசீலா பள்ளியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை இவர் கொண்டிருந்தார். 1979இல் பெங்களூரில் , பி.எம். ஸ்ரீ பிரதிஸ்தானாவை நிறுவுவதற்கு இவர் பொறுப்பேற்றார்.

இறப்பு

தொகு

மார்ச் 12, 1990 அன்று பெங்களூரில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வி._சீதாராமையா&oldid=3195280" இலிருந்து மீள்விக்கப்பட்டது