புனைபெயர்

(புனைப்பெயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனைபெயர் என்பது ஓர் எழுத்தாளர் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் பெயர். ஒரு படைப்பாளி ஏதோ ஒரு காரணத்திற்காக தனது உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல் வேறு ஒரு பெயரில் தனது படைப்புகளை வெளியிடலாம். தனிமனிதர்கள் மட்டுமல்லாமல் குழுக்களும் புனைப்பெயரில் தங்கள் படைப்புகளை வெளியிடலாம். தங்கள் உண்மை அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பாமை, கவர்ச்சியான பெயர்கள் மூலம் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்தல் போன்றவை புனைபெயர் பயன்படுத்தப்படும் காரணங்களுள் சில.[1][2][3]

புனைபெயர் பட்டப்பெய‌ரன்று. பட்டப்பெயர் என்பது வேறு ஒருவரால் வைக்கப்படுவது. (எ.கா- பாரதி) புனைபெயர் சிறப்புப்பெயரும் அன்று. சங்க இலக்கியத்தில் இருந்த சில பாடல்களை எழுதியவரின் பெயர் தெரியாததால் பாடலிலிருந்து அழகிய உவமையைக் கொண்டு பெயரிடும் மரபு இருந்தது.

சில எழுத்தாளர்களின் இயற்பெயரும் புனைப்பெயரும்
இயற்பெயர் புனைபெயர்
முத்தையா கண்ணதாசன்
கனகசுப்புரத்தினம் பாரதிதாசன்
ரெங்கராஜன் சுஜாதா
வே. சங்கரன் ஞாநி (எழுத்தாளர்)
கி. பழனிச்சாமி ஞானி (எழுத்தாளர்)
சொ. விருத்தாச்சலம் புதுமைப்பித்தன்
மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார் மதன்
ராஜகோபால் சுரதா
ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ பாப்லோ நெருடா
அகிலாண்டம் அகிலன்
மனோகரன் எஸ். வி. இராசதுரை
வேணுகோபாலன் புஷ்பா தங்கதுரை
லெ. இராமநாதன் தமிழ்வாணன்
விஜயரங்கம் தமிழ் ஒளி
தியாகராஜன் சின்னக்குத்தூசி
இராம. லெட்சுமணன் லேனா தமிழ்வாணன்
ம. லெட்சுமணன் மணா
வேங்கட கிருஷ்ணன் கிருஷ்ணா டாவின்சி

புதுமைப்பித்தன், கண்ணதாசன் போன்ற சில எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புனைபெயர்‌களில் எழுதி வந்தனர்.

  • மேற்கோள்கள்

    தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனைபெயர்&oldid=4100980" இலிருந்து மீள்விக்கப்பட்டது