எம் ஏ அசீசு விளையாட்டரங்கம்
பல்நோக்கு விளையாட்டரங்கம் (வங்காளதேசம்)
எம். ஏ. அசீசு விளையாட்டரங்கம் (M. A. Aziz Stadium, வங்காள மொழி: এম এ আজিজ স্টেডিয়াম) அல்லது சிட்டகொங் விளையாட்டரங்கம் வங்காளதேசத்தின் சிட்டகொங் நகரில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். இங்கு உள்ளூர் துடுப்பாட்ட, காற்பந்தாட்ட அணிகள் விளையாடி வருகின்றன. இந்த விளையாட்டரங்கில் 30,000 பார்வையாளர்கள் அமரக்கூடும். [1] வரலாற்றில் 1971ஆம் ஆண்டு நிகழ்ந்த விடுதலைப் போரின்போது இந்த விளையாட்டரங்குதான் தலைமையகமாக விளங்கியது. தற்போது இந்த துறைமுக நகரத்தின் முதன்மை விளையாட்டரங்கமாக சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம் விளங்குகிறது.
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | சிட்டகொங் |
உருவாக்கம் | 1977 |
உரிமையாளர் | சிட்டகொங் கோட்டம் |
இயக்குநர் | வங்காளதேசத் தேசிய காற்பந்து அணி, சிட்டகொங் அபாகனி, சிட்டகொங் மொகமதியன் |
குத்தகையாளர் | சிட்டகொங் மொகமதியன் (காற்பந்து) சிட்டகொங் அபாகனி (காற்பந்து) சிட்டகொங் கிங்சு (துடுப்பாட்டம்) |
முடிவுகளின் பெயர்கள் | |
பெட்ரோல்லொ முனை இசாபனி முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 15 – 19 நவ 2001: வங்காளதேசம் எ சிம்பாப்வே |
கடைசித் தேர்வு | 6 – 10 சன 2005: வங்காளதேசம் எ சிம்பாப்வே |
முதல் ஒநாப | 27 அக்டோபர் 1988: வங்காளதேசம் எ இந்தியா |
கடைசி ஒநாப | 26 சனவரி 2005: வங்காளதேசம் எ சிம்பாப்வே |
9 திசம்பர் 2012 இல் உள்ள தரவு மூலம்: எம். ஏ. அசீசு விளையாட்டரங்கம், கிரிக்கின்ஃபோ |