எம் சத்தியநாராயணன்
(நீதியரசர்) எம் சத்தியநாராயணன் (பிறப்பு 10 ஜூன் 1959) மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி. தமிழக எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி இவர்.[1]
மாண்புமிகு நீதியரசர் எம். சத்த்தியநாராயணன் | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | மதராசு உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் |
ஆரம்பக் கல்வி
தொகுநீதிபதி சத்தியநாராயணன், சென்னையில் உள்ள டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில் பி.காம் படித்தார், பின்னர் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.[2]
வழக்கறிஞராக
தொகுநீதிபதி சத்தியநாராயணன் ஏப்ரல் 6, 1983 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். அவர் வழக்கறிஞர்கள் எம். என். பத்மநாபன் மற்றும் கே. எஸ். தினகரன் ஆகியோரின் கீழ் இளம் வழக்கறிஞராக இருந்தார். அவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு முன்பாக சிவில் மற்றும் கிரிமினல் தரப்பில் வாதாடி வந்தார். அகில இந்திய சேவை அதிகாரிகள் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற வாடிக்கையாளர்களுக்காக அவர் சேவை மற்றும் வரி விஷயங்களையும் மேற்கொண்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிலையான சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.[3]
நீதிபதியாக
தொகுஅவர் ஏப்ரல் 23, 2008 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், நவம்பர் 9, 2009 அன்று நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.[4]
நீதிபதி சத்யநாராயணன் ஜூன் 6 2021 ல் ஓய்வு பெறவிருந்தாலும், அவர் மே 11 2021 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சேர வேண்டி இருந்ததால் அவருக்கு முன்கூட்டியே பிரியாவிடை வழங்கப்பட்டது.[5]
முக்கிய வழக்குகள்
தொகுமெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் அ. இ. அ. தி. மு. க கட்சியின் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து மனுக்கள் மீது இரண்டு விதமான தீர்ப்பை வழங்கியது. அதனால், மூன்றாவது நீதிபதியாக, சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டர்.<ref>"டெலகிராப் இந்தியா".</ref
மேற்கோள்கள்
தொகு- ↑ "18 MLAs disqualification case: Justice M Sathyanarayanan to pronounce verdict today - India News". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2018-10-30.
- ↑ "Details about Justice SathyaNarayanan | #MLAsDisqualificationCase". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2018-10-30.
- ↑ RAMESH (2016-12-03). "Hon'ble Thiru. Justice M. Sathyanarayanan" (PDF). Archived from the original (PDF) on 2018-10-30. பார்க்கப்பட்ட நாள் 2018-10-30.
- ↑ Madras High Court. "Madras High Court | Profile of Judges". hcmadras.tn.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-10-30.
- ↑ "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்".