எய்லி ஓவன்சின் கொலை

எய்லி ஓவன்சு (2003 ஆகத்து 18 [1]- 2014 பெப்ரவரி 18) என்பவர் மிசௌரி மாகாணத்தின் சுபிரிங்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஆவார். இவர் 2014 பெப்ரவரி 18 அன்று பலவந்தமாக கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்யப்பட்டார்.[2] இந்தக்  கொலை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து, விவாதிக்கப்பட்டது. 2014 பெப்ரவரி 23 அன்று ஹெயிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்த்தினர். பிற்பாடு அண்டையில் உள்ள பூங்கா எய்லி விளையாட்டு மைதானம் என பெயரிடப்பட்டது.

2014 பெப்ரவரி 18 அன்று சுமார் 5:00 மணியளவில், தன் வீட்டிலிருந்து ஒரு நண்பனின் வீட்டுக்கு நடந்து சென்றபோது, ஒரு சரக்குந்து ஓட்டுக்கொண்டு வந்த நபர் எய்லியை வழிகேட்ட அழைத்தார். அவனுக்கு வழியைக்கூற சரக்குந்துக்கு அருகில் சென்ற அவளை இழுத்து, தனது லாரிக்குள் வீசி எறிந்தான். இதை நேரில் கண்ட சாட்சி இருந்தது.

க்ரெய்க் மைக்கேல் உட் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை 2017-ல் தொடங்க உள்ளது. வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக, குற்றவளிக்கு மரண தண்டனை பெற்றுத்தர உத்தேசித்துள்ளனர். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Celebration in Park Marks 13th Anniversary of Hailey Owens' Birth". kspr.com. 2016-08-08. Archived from the original on 2017-03-16. பார்க்கப்பட்ட நாள் 2017-03-15.
  2. Watson, Frances; Damiano, Emily. "Hailey Owens' accused killer Craig Wood wants a deal". kspr.com. Archived from the original on 3 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Mother of Hailey Owens asks prosecutor to drop death penalty" (in en). Springfield News-Leader. http://www.news-leader.com/story/news/crime/2017/04/20/mother-hailey-owens-asks-prosecutor-drop-death-penalty/100619792/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்லி_ஓவன்சின்_கொலை&oldid=3928200" இலிருந்து மீள்விக்கப்பட்டது