எரிக்கு தெமேன்
எரிக்கு தி. தெமான் (Erik D. Demaine) (பிறப்பு: பிப்ரவரி 28, 1981), அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி (MIT. மாசாச்சுசெட்ஃசு இன்சிட்யூட்டு ஆவ் தெக்னாலச்சி) கல்விக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக உள்ளார்.
எரிக்கு தெமேன் Erik D. Demaine | |
---|---|
எரிக்கு தெமேன் (இடம்), மார்ட்டின் தெமேன் (நடு), பில் இசுப்பைட்டு (வலம்) ஆகிய மூவரும் சான் ஓர்த்தன் கான்வே என்பார் காட்டும் ஒரு சீட்டாட்டக் கண்கட்டு வேடிக்கையைப் பார்க்கின்றனர் (June 2005). | |
பிறப்பு | பெப்ரவரி 28, 1981 ஆலிஃவாக்சு, நோவா இசுகோசியா, கனடா |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
தேசியம் | கனடியர், அமெரிக்கர் |
பணியிடங்கள் | மாசாச்சுசெட்ஃசு இன்சிட்யூட்டு ஆவ் தெக்னாலச்சி |
கல்வி கற்ற இடங்கள் | தல்ஃகவுசி பல்கலைக்கழகம் வாட்டர்லூ பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | மிஃகாய் பத்ராசுக்கு (Mihai Pătraşcu) |
தொடக்கக்கால வாழ்க்கை
தொகுஎரிக்கு தெமேன் கனடாவில் உள்ள நோவா இசுகோசியா மாநிலத்தில் உள்ள ஆலிஃவாக்சு (Halifax) என்னும் ஊரில், தந்தையார் மார்ட்டின் தெமேனுக்கும் (Martin Demaine) தாயார் சூடி ஆன்டர்சனுக்கும் (Judy Anderson) மகனாகப் பிறந்தார். இவருக்கு அகவை 7 இருக்கும் பொழுது, தன் தந்தையாருடன் வட அமெரிக்காவில் பல இடங்களில் பயணம் செய்தார். இவருடைய தந்தையார் கழைக்கூத்தாடிக் கலையிலும் சிலை வடிப்பதிலும் வேறு பல கலைகளிலும் வல்லவர். எரிக்கு தெமேன் வீட்டிலேயே (தந்தையாருடன் செல்லும் இடங்களில் எல்லாம்) படித்தார்.[1] எரிக்கு தெமேன் ஒரு குழந்தை மேதை.[2] எரிக்கு தெமேன் அகவை 12 இருக்கும் பொழுதே தல்ஃகவுசி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்; அகவை 14 இலேயே பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் இவருடைய முனைவர் பட்டத்தை அகவை 20 இலேயே வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முடித்தார்[3][4].
தொழில்சார் வெற்றிகள்
தொகுஇவருடைய, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் செய்த, முனைவர் பட்ட ஆய்வுரை ஒரிகாமி என்னும் தாள் மடிப்புக் கலையைச் சார்ந்த கணக்கியல் கூறுகளைப் பற்றியதாக இருந்தது. இது ஒரு முன்னோடியான ஆய்வுப் பதிவு.[5] இந்த முனைவர் பட்ட ஆய்வுரைக்கு கனடாவின் கவர்னர் செனரல் பதக்கம் பரிசாக அளிக்கப்பட்டது; கனடாவின் அறிவியல், பொறியியல் ஆய்வுக் குழுமத்தின் (NSERC) 2003 ஆம் ஆண்டுக்கான முனைவர் பட்ட சிறப்புப் பரிசும் அளிக்கப்பட்டது.
இவ் ஆய்வுரையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூலும் வெளியிடப்பட்டது.[6]
எரிக் தெமேன் அமெரிக்காவில் மாசாச்சுசெட்ஃசு மாநிலத்தில் உள்ள எம்.ஐ.டி (MIT) கல்விக்கழகத்தில் 2001 ஆம் ஆண்டு, தனக்கு அகவை 20 இருக்கும் பொழுது பேராசிரியராகச் சேர்ந்தார். இவரே அக் கல்விக்கழகத்தின் வரலாற்றில் அங்கு சேர்ந்த மிகவும் இளமையான பேராசிரியர்.[3][7]. சேர்ந்த இரண்டு ஆண்டுகளில், 2003 ஆம் ஆண்டு, புகழ்பெற்ற மெக்கார்த்தர் பேராளர் நிலையை (MacArthur Fellowship) வென்றார்.
இவர் எம்.ஐ.டி கல்விக்கழகத்தின் கணிமைக் கொள்கைக் குழுவிலும் எம்.ஐ.டி-யின் கணினி அரிவியல், செயற்கை அறிவு ஆய்வகக் குழுக்களிலும் உறுப்பினராக இருக்கின்றார்.
தற்கால கலை கண்காட்சியகத்தில் (மியூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட்டு) 2008 ஆண்டு காட்சிப் படுத்தப்பட்ட வகுதியும் நீட்சிமையான உள்ளமும் ( “Design and the Elastic Mind” ) என்னும் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட கணக்கியல் ஒரிகாமி கலைப்படைப்பு (கணக்கியல் தாள்மடிப்புக் கலை) (Mathematical origami) இப்பொழுது நிலையான காட்சிக்கலைப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது [8].
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ Barry, Ellen (2002-02-17). "Road Scholar Finds Home at MIT". Boston Globe. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=BG&p_theme=bg&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0F1C278D90533407&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM. பார்த்த நாள்: 2008-04-15.
- ↑ Kher, Unmesh (2005-09-04). "Calculating Change: Why Origami Is Critical to New Drugs: The Folded Universe". TIME. Archived from the original on 2011-03-09. பார்க்கப்பட்ட நாள் 28 February 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 3.0 3.1 Wertheim, Margaret (2005-02-15). "Origami as the Shape of Things to Come". The New York Times. http://www.nytimes.com/2005/02/15/science/15origami.html?pagewanted=1&ei=5090&en=7c6938eb4b440672&ex=1266210000&partner=rssuserland. பார்த்த நாள்: 2008-04-15.
- ↑ O'Brien, Danny (2005-08-19). "Commercial origami starts to take shape". Irish Times இம் மூலத்தில் இருந்து 2012-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120209093438/http://moreresults.factiva.com/results/index/index.aspx?ref=IRTI000020050819e18j00023. பார்த்த நாள்: 2008-04-15.
- ↑ "National honour for Demaine". University of Waterloo. 2003-03-31. பார்க்கப்பட்ட நாள் 2008-04-15.
- ↑ Demaine, Erik; O'Rourke, Joseph (July 2007). Geometric Folding Algorithms: Linkages, Origami, Polyhedra. Cambridge University Press. pp. Part II. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85757-4.
- ↑ Beasley, Sandra (2006-09-22). "Knowing when to fold". American Scholar 75 (4).
- ↑ Curved Origami Sculpture, Erik and Martin Demaine.
வெளி இணைப்புகள்
தொகு- எரிக்கு தெமேன்
- கணித மரபியல் திட்டத்தில் எரிக்கு தெமேன்
- செய்திகளில் வாழ்க்கை வரைவு[தொடர்பிழந்த இணைப்பு]
- Between the Folds எரிக்கு தெமேன் மற்றும் 14 அனைத்துலக ஒரிகாமி கலைஞர்களைப் பற்றிய ஆவணப்படம்