எருசலேமின் சுவர்கள்
எருசலேமின் சுவர்கள் அல்லது எருசலேமின் மதில்கள் (எபிரேயம்: חומות ירושלים) யெரூசலம் பழைய நகரால் சுழப்பட்டுள்ளது (ஏறக்குறைய 1 km²). இச்சுவர்கள் 1535 முதல் 1538 வரையான காலப்பகுதியில், முதலாம் சுலைமானின் கட்டளைக்கு ஏற்ப ஓட்டமான் பேரரசு எருசலேமை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டன.
எருசலேம் பழைய நகரும் அதன் சுவர்களும்[1] | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | ii, iii, vi |
உசாத்துணை | 148 |
UNESCO region | குறிப்பிடப்படவில்லை |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1981 (5வது தொடர்) |
ஆபத்தான நிலை | 1982- |
சுவரின் நீளம் 4,018 மீட்டர்கள் (2.4966 மைல்), அதன் சராசரி உயரம் 12 மீற்றர்கள் (39.37 அடி) மற்றும் அதன் சராசரி தடிப்பு 2.5 மீற்றர்கள் (8.2 அடி). இச்சுவர் 34 கண்காணிப்புக் கோபுரங்களையும் 8 வாயில்களையும் கொண்டுள்ளது.
1981 இல் யெரூசலம் பழைய நகருடன் சேர்த்து யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
எருசலேமின் சுவர்கள் அந்நகரின் எல்லைகளைப் பாதுகாக்கவே கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றது.
உசாத்துணை
தொகுஇவற்றையும் பார்க்க
தொகு