எருசலேம் தாக்குதல், ஜூன் 2017

ஆள்கூறுகள்: 31°46′54″N 35°13′50″E / 31.78167°N 35.23056°E / 31.78167; 35.23056

பழைய நகர் (எருசலேம்) பகுதியில் 17 ஜூன் 2017 அன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இரு பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலுமொரு பாலஸ்தீனியர் இஸ்ரேலிய பெண் காவலர் ஒருவரை கத்தியால் குத்தினார். குத்தப்பட்ட பெண் காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார். இஸ்ரேலிய காவல்துறையினர் தாக்குதல்தாரிகள் மூவரையும் சுட்டுக் கொன்றனர்.[1][2]

எருசலேம் தாக்குதல், ஜூன் 2017
எருசலேம் தாக்குதல், ஜூன் 2017 is located in Jerusalem
கத்திக்குத்து
கத்திக்குத்து
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு
பழைய எருசலேம் நகர வரைபடம்
இடம்எருசலேம்
நாள்சூன் 16, 2017 (2017-06-16)
19:30 (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+03:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இசுரேலிய எல்லைக் காவலர்
தாக்குதல்
வகை
கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு
ஆயுதம்கத்தி மற்றும் துப்பாக்கிகள்
இறப்பு(கள்)4 (மூன்று தாக்குதல்தாரிகள் உட்பட)
காயமடைந்தோர்4
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
இசுலாமிய அரசு (பொறுப்பேற்றுக் கொண்டனர்)
பாப்புலர் ப்ரண்ட் ஃபார் த லிபரேசன் ஆஃப் பாலஸ்தீன் (Popular Front for the Liberation of Palestine) மற்றும் ஹமாஸ் (பொறுப்பேற்றுக் கொண்டனர்)

பொறுப்பேற்புதொகு

இசுலாமிய அரசு தீவிரவாத இயக்கம் இத்தீவிரவாதச் செயலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது. ஆனால் பாப்புலர் ப்ரண்ட் ஃபார் த லிபரேசன் ஆஃப் பாலஸ்தீன் (Popular Front for the Liberation of Palestine) மற்றும் ஹமாஸ் ஆகியவை இப்பொறுப்பேற்பலை நிராகரித்து, தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த்வர்கள் என தெரிவித்தது.[3] இஸ்ரேலிய அதிகாரிகள் இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்றும் இத்தாக்குதலுக்கும் இசுலாமிய அரசு தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் ஜூன் 17 அன்று தெரிவித்தனர். 2017 ஆம் ஆண்டில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இது ஆகும்.[4]

மேற்கோள்கள்தொகு

  1. "Border Police officer killed in Jerusalem terror attack". www.jpost.com. 16 June 2017. 16 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. Israeli Dies as Palestinian Attackers Stage Assaults in Jerusalem, 16th June 2017, New York Times
  3. "ISIS claims responsibility for deadly Jerusalem attack". www.ynetnews.com. 16 June 2017. 17 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. No evidence of Islamic State link to Jerusalem attack: Israeli police, Reuters, 17th June 2017