எருசலேம் முற்றுகை (கிமு 63)

எருசலேம் முற்றுகை பெரிய பொம்பேயின் கிழக்கு படையெடுப்பு காலத்தில் இடம் பெற்றது. மக்கபேயர் அரசுக்காக ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சண்டையில் தலையிட பொம்பே அழைக்கப்பட்டார். இவருடைய எருசலேம் மீதான வெற்றி, யூத சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உரோமைக் குடியரசுவிற்கும் யூதேயாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.

எருசலேம் முற்றுகை

பொம்பே எருசலேம் கோயிலில், ஜீன் போக்குட் 1470–1475
நாள் கிமு 63
இடம் எருசலேம்
உரோமயர் வெற்றி, யூதேயா உரோமைக் குடியரசுடன் இணைக்கப்பட்டது
பிரிவினர்
உரோமைக் குடியரசு மக்கபேயர் அரசு
தளபதிகள், தலைவர்கள்
பெரிய பொம்பே
பஸ்டஸ் கொர்னெலியுஸ் சுல்லா
இரண்டாம் ஆர்ஸ்டோபிலஸ்
இழப்புகள்
சில 12,000

முற்றுகை தொகு

பொம்பே எருசலேமுக்கு வந்தபோது, அவர் நகரத்தை மேற்பார்வையிட்டார்:

அவர் பார்த்தபோது சுவகுகள் மிகவும் பலமிக்கதாயிருந்தது. அவற்றை மேறகொள்வது கடினமாகத் தெரிந்தது. சுவருக்கு முன்பிருந்த பள்ளத்தாக்கு பயங்கரமாயிருந்தது. பள்ளத்தாக்கினுள் இருந்த கோயில் பலமான சுவர்களினால் சூழப்பட்டிருந்தது. ஆகவே, நகர் கைப்பற்றப்பட்டால், எதிரிகள் பின்வாங்கி இரண்டாவது இடமாக கோயிலை அடைக்கலமாகக் கொள்வர்.

ஜொசிஃபஸ், யூதப்போர் 1:141[1]

உசாத்துணை தொகு