மக்கபேயர் அரசு
மக்கபேயர் அரசு அல்லது ஹஸ்மோனிய அரசு (Hasmonean dynasty[2] எபிரேயம்: חשמונאים, r Ḥashmona'im; Audio பரணிடப்பட்டது 2007-11-05 at the வந்தவழி இயந்திரம்) என்பது யூதேயா மற்றும் அதனைச் சூழ்ந்திருந்த பிரதேசங்களை உன்னத பழம்பொருட் காலத்தில் ஆட்சி செய்த அரசாகும். கிட்டத்தட்ட கி.மு. 140 - 116 காலப்பகுதியில் செலூசிட்டிடமிருந்து பெற்ற அரை அதிகாரத்தில் யூதேயாவை ஆண்டனர். கிமு 110 இலிருந்து செலூக்கியப் பேரரசு சிதவடைந்ததும் முழு சுதந்திர அரசாக மாறி, தன் எல்லையை கலிலேயா, இத்துரியா, பெரா, இதுமேயா, சமாரியா என விரிபுபடுத்தியது. சில வரலாற்றாசிரியர்கள் இக்காலத்தை சுதந்திர இசுரேலிய அரசு எனக் குறிப்படுகின்றனர்.[3] கி.மு. 63 இல் இவ்வரசு உரோமைக் குடியரசால் வெற்றி கொள்ளப்பட்டு, உரோம வாடிக்கை அரசாக மாற்றப்பட்டது. கி.மு. 37 இல் ஏரோதிய அரசிடம் தோற்கும் வரை 103 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆயினும் முதலாம் ஏரோது மக்கபேய இளவரசியை திருமணம் செய்வதனூடாக தன் பிரதேசத்து சட்ட ஒழுங்கை காப்பற்ற முனைந்தபோதும், மக்கபேய கடைசி ஆண் வாரிசை தன்னுடைய எரிக்கோ அரண்மனையில் வைத்து மூழ்கடிக்கத் திட்டமிட்டான்.
மக்கபேயர் அரசு ממלכת החשמונאים Mamlekheth haHash'mona'im | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கி.மு 140–கி.மு 37 | |||||||||
நிலை | அரசு | ||||||||
தலைநகரம் | எருசலேம் | ||||||||
பேசப்படும் மொழிகள் | மக்கபேய அரமேயம் (அலுவலக மொழி),[1] கோனி கிரேக்கம் | ||||||||
சமயம் | இரண்டாம் கோயில் யூதம் | ||||||||
அரசாங்கம் | கடவுள் நம்பிக்ககை முடியாட்சி | ||||||||
கொகென் கடோல், பசிலொஸ் | |||||||||
• கி.மு 140–135 | சீமோன் மக்கபே] | ||||||||
• கி.மு 134 (110)–104 | ஜோன் கைகனூஸ் | ||||||||
• கி.மு 67–63 (40) | கைகனூஸ் II | ||||||||
• கி.மு 40–37 | அண்டிகோனுஸ் | ||||||||
சட்டமன்றம் | சண்கெட்ரின் | ||||||||
வரலாற்று சகாப்தம் | கெலோனிய காலம் | ||||||||
• மக்கபேய கிளர்ச்சி | கி.மு 164 | ||||||||
• அரசவம்சம் உருவாக்கப்பட்டது | கி.மு 140 | ||||||||
• முழுச் சுதந்திரம் | கி.மு 110 | ||||||||
• பொம்பே மக்கபேய உள்நாட்டுப் போரில் தலையிடல் | கி.மு 63 | ||||||||
• பார்த்தீயர்களின் படையெடுப்பு | கி.மு 40 | ||||||||
• ஏரோது மக்கபேயரை தோற்கடித்தல் | கி.மு 37 | ||||||||
நாணயம் | மக்கபேய நாணயங்கள் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இசுரேல் லெபனான் யோர்தான் சிரியா |
உசாத்துணை
தொகு- ↑ Studies in Qumran Aramaic, T. Muraoka, p2
- ↑ From Late Latin Asmonaeus from Ancient Greek Ἀσαμωναῖος (Asamōnaios) from Hebrew Ḥashmona'i.
- ↑ Leon James Wood, David O'Brien, A survey of Israel's history, Zondervan, 1986