எரோதுகளின் இராச்சியம்
எரோதிய இராச்சியம் (Herodian kingdom)[1][2]அகஸ்ட்டஸ் காலத்திய உரோமைக் குடியரசுக்குட்பட்ட கப்பம் ஒரு சிற்றரசு ஆகும்.[3] மக்கபேயர் இராச்சியத்தை வீழ்த்தி இசுரேல் இராச்சியத்தை நிறுவியவர் முதலாம் ஏரோது எனும் யூதர் ஆவார். இதன் தலைநகரம் எருசலேம் ஆகும். மன்னர் முதலாம் எரோது இந்த இராச்சியத்தை கிமு 37 முதல் கிமு 4 வரை ஆட்சி செய்தார்.
எரோதுகளின் இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 37–கிமு 4 | |||||||||
நிலை | உரோமைப் பேரரசுக்குட்பட்ட சிற்றரசு | ||||||||
தலைநகரம் | எருசலேம் | ||||||||
பேசப்படும் மொழிகள் | கிரேக்கம், அரமேயம், லத்தீன், எபிரேயம் | ||||||||
சமயம் | இரண்டாம் கோயில் யூதம் சமாரியம் உரோமை வழிபாடு | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மன்னர் | |||||||||
முதலாம் ஏரோது | |||||||||
வரலாற்று சகாப்தம் | அகஸ்ட்டஸ் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 37 | ||||||||
• முடிவு | கிமு 4 | ||||||||
நாணயம் | எரோதிய நாணயம் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | பாலஸ்தீனம், ஜோர்தான் & சிரியா |
மன்னர் முதலாம் ஏரோது கிமு 4ல் இறந்த பின்னர் அவரது 3 மகன்கள் எரோதிய இராச்சியத்தை யூதேயா, சமாரியா மற்றும் இதுமியா என மூன்றாகப் பிரித்துக் கொண்டு ஆண்டனர். கிபி 6ல் எரோது மன்னரின் 3 மகன்கள் ஆட்சி செய்த பகுதிகளை உரோமைப் பேரரசு கலைத்து விட்டு, ஒட்டு மொத்த எரோது இராச்சியத்தை, உரோமைப் பேரரசின் ஆளுநர் கீழ் ஆளப்பட்டது. கிபி 37 முதல் 41 வரை உரோமைப் பேரரசராக இருந்த காலிகுலா, கலிலேயாவை ஆண்ட யூத சிற்றரசை கலைத்து விட்டு, யூத மாகாணத்துடன் இணைத்தார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ History of the Christian tradition (Vol. 1), Thomas D. McGonigle; James F. Quigley, Paulist Press, 1988 p. 39
- ↑ Samuel Rocca (30 March 2015). Herod's Judaea: A Mediterranean State in the Classic World. Wipf and Stock Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4982-2454-3.
- ↑ Jewish War 1.14.4: Mark Antony " ...then resolved to get him made king of the Jews ... told them that it was for their advantage in the Parthian war that Herod should be king; so they all gave their votes for it. And when the senate was separated, Antony and Caesar went out, with Herod between them; while the consul and the rest of the magistrates went before them, in order to offer sacrifices [to the Roman gods], and to lay the decree in the Capitol. Antony also made a feast for Herod on the first day of his reign."