எர்பர்ட் அகர்

எர்பர்ட் செபாஸ்டியன் அகர் (Herbert Sebastian Agar) (29 செப்டம்பர் 1897-24 நவம்பர் 1980) என்பவர் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரும் வரலாற்றாசிரியரும் மற்றும் லூயிஸ்வில் கூரியர்- பருவ இதழின் ஆசிரியரும் ஆவார்.

தொடக்க கால வாழ்க்கை.

தொகு

செபாஸ்டியன் அகர் செப்டம்பர் 29,1897 அன்று நியூயார்க் நியூ ரோச்சலில் ஜான் ஜி. அகர் மற்றும் ஆக்னஸ் லூயிஸ் மெக்டொனோ ஆகியோருக்குப் பிறந்தார்.[1] 1919- ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார், 1922-ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், 1924-ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

தொகு

அமெரிக்க ஜனாதிபதி பதவியை விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்த்த 1933 ஆம் ஆண்டு வெளியான தி பீப்பிள்ஸ் சாய்ஸ் என்ற புத்தகத்திற்காக 1934 ஆம் ஆண்டில் அகர் வரலாற்றுக்கான புலிட்சர் பரிசை வென்றார். அகர் தெற்கு அக்ராரியர்களுடன் தொடர்புடையவர் ஆவார். இவர் ஆலன் டேட்டுடன் இணைந்து, ஹூ ஓன்ஸ் அமெரிக்கா? என்ற புத்தகத்தைத் தொகுத்தார். (1936).[2][3] விநியோகவாத சமூகப் பொருளாதார அமைப்பின் அமெரிக்கமயமாக்கப்பட்ட பதிப்பின் வலுவான ஆதரவாளராகவும் இருந்தார்.

அகரின்[4] 1950 ஆம் ஆண்டு புத்தகமான தி பிரைஸ் ஆஃப் யூனியன் ஜான் எஃப் கென்னடிக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்றாகும், மேலும், அவர் அதன் நகலை தனது மேசையில் வைத்திருந்தார். ஜான் குவின்சி ஆடம்ஸின் தைரியமான செயலைப் பற்றிய தி பிரைஸ் ஆஃப் யூனியனில் இருந்து ஒரு பத்தியில் செனட்டரின் தைரியத்தைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதுவதற்கான யோசனையை கென்னடிக்கு வழங்கினார். அவர் தனது உரை எழுத்தாளர் டெட் சோரென்சனிடம் பத்தியைக் காட்டினார், மேலும், இதே போன்று சில எடுத்துக்காட்டுகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மரணம்

தொகு

சூன் 8,1945 அன்று, அகர் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லுடியன்ஸின் மகளும், முன்னாள் பிரித்தானிய போக்குவரத்து அமைச்சரான யுவான் வாலஸின் விதவையுமான பார்பரா வாலஸை மணந்தார்.[5]

அவர் நவம்பர் 24,1980 அன்று இங்கிலாந்தின் சசெக்சில் இறந்தார். அங்கு அவர் இரண்டாம் உலகப் போரிலிருந்து வசித்து வந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "HERBERT AGAR DIES; AUTHOR AND EDITOR; Wrote Prolifically on the American Democratic Heritage--Won Pulitzer Prize in History A Champion of Democratic Ideals Correspondent and Columnist". http://timesmachine.nytimes.com/timesmachine/1980/11/25/113959426.html. பார்த்த நாள்: 2016-11-30. 
  2. Joshua P. Hochschild (2000). Review of Who Owns America?, First Things.
  3. William Fahey (2002). Preface to Vincent McNabb, The Church and the Land (1926)
  4. "The President's Desk, Page 2". Archived from the original on 2006-10-03. பார்க்கப்பட்ட நாள் 2010-08-19.
  5. "COMDR. HERBERT AGAR TO MARRY IN LONDON". http://timesmachine.nytimes.com/timesmachine/1945/06/09/305242472.html. பார்த்த நாள்: 2016-11-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பர்ட்_அகர்&oldid=3924731" இலிருந்து மீள்விக்கப்பட்டது